மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை! சவரனுக்கு ரூ.160, வெள்ளி கிலோவிற்கு 300 குறைந்தது! 17-11-2020

by Loganathan, Nov 17, 2020, 11:18 AM IST

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. தொடர் விடுமுறைகளின் காரணமாகத் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் ஏதும் இல்லை. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4821க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 20 குறைந்து, கிராமானது ரூ‌ 4801க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4801
8 கிராம் ( 1 சவரன் ) - 38408

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5201க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு 20 உயர்ந்து, கிராமானது 5181 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5181
8 கிராம் - 41448

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறைய தொடங்கும் ஆனால் பண்டிகை தினங்களால் தொடர் விடுமுறையின் காரணமாக கிராமிற்கு மாற்றமில்லாமல் இருந்தது. ஆனால் இன்று கிராம் நேற்றைய விலையில் 10 பைசா குறைந்து,68.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 68100 க்கு விற்பனையாகிறது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை