ரவுடியுடன் பர்த்டே பார்ட்டி : 4 போலீசார் அதிரடி இட மாற்றம்

வாழப்பாடியில் ரவுடியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 போலீஸார் அதிரடியாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

by Balaji, Nov 17, 2020, 11:25 AM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருப்பவர் சுப்பிரமணியம் (49) . இவர் தனது பிறந்தநாளில் அவர் தங்கியிருந்த விடுதியில் ரவுடி சங்கர் என்பவர் கேக் ஊட்டிய புகைபடம் சமூக வலைதளங்களில் வைராலாகியது. இவருடன் உடன் கார்ப்பட்டி, வாழப்பாடி தனிப்பிரிவு எஸ் எஸ்ஐ அருள்குமார் (49), தலைமை காவலர் அருள் (43) ஆகிய இருவரும், வாழப்பாடி காவல் ஆய்வாளர் ஜீப் ஓட்டுநர் காவலர் ஆச்சாங்குட்டப்பட்டி. ரமேஷ் (28) ஓட்டுநர் தலைமை காவலர் முத்துகுமாரன்(42) ஆகியோருடன் ரவுடி சங்கர், எடுத்த குருப் புகைப்படமும் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரை உடல் போலீஸ் அதிகாரியை கைகொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்களை முகம் சுளிக்க வைத்தது.இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட எஸ்பி தீபா கணிக்கர் விசாரணை நடத்தி நான்கு பேரையும் சேலம் ஆயுத படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை