உயரத் தொடங்கியது தங்கத்தின் விலை! சவரனுக்கு ரூ.384 உயர்வு! வெள்ளியின் விலை கிலோ ரூ.1600 உயர்வு! 02-12-2020

Advertisement

கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும் தான் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் வெகுஜன மக்கள் ஆர்ப்பரிப்பில் உள்ளனர்‌.ஆனால் முதலீட்டாளர்கள் இடையே இந்த விலை வீழ்ச்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, நேற்று முதல் உயர ஆரம்பித்துள்ளது‌. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4526 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.48 உயர்ந்து, கிராமானது ரூ.4574 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1கிராம்- 4574
8 கிராம் (1 சவரன்) - 36592

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.4906 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.48 உயர்ந்து, கிராமானது ரூ.4954 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம்(24k)

1 கிராம் - 4954
8 கிராம் - 39632

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்கு சந்தையில் தாக்குப்பிடித்து. இன்றும் வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் ரூ.1.60 பைசா உயர்ந்து, கிராமானது ரூ.66.40 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.66400 க்கு விற்பனையாகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021

READ MORE ABOUT :

/body>