இந்தியாவின் 100 செல்வந்தர் பெண்கள்.. முதலிடம் பிடித்த ரோஷினி நாடார்!

by Sasitharan, Dec 4, 2020, 19:23 PM IST

இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலை Kotak Wealth Hurun என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முதலிடம். பிடித்துள்ளார். பயோகானின் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். ஜோஹோவின் ராதா வெம்பு (5 வது), ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் ரேணு முஞ்சல் (7வது), நைகாவின் ஃபால்குனி நாயர் (10வது) இடம் பிடித்து உள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்னவென்றால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 பெண்கள் சுய முன்னேற்றத்தால் முன்னேறியவர்கள். மீதமுள்ள 69 பேர் பரம்பரை செல்வந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 19 சதவீத பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள், 30 சதவீதம் பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள். கனிகா டெக்ரிவால் (ஜெட் செட்கோ), அஞ்சனா ரெட்டி (யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பிஸ்), விதி சங்க்வி (சன் பார்மாசூட்டிகல்ஸ்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் வயது குறைந்த பெண்கள். ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி அதன்மூலம் பணக்காரர்களாக இடம்பிடித்தவர்கள், திவ்யா கோகுல்நாத் (BYJU இன் இணை-ஃபவுட்னர்) உட்பட ஆறு பெண்கள்.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை