முதல் இடத்துக்கு மல்லுக்கட்டும் போட்டியாளர்கள்.. பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நேற்று என்ன நடந்தது??

Advertisement

60வது நாள் தொடர்கிறது. வொய்ட் ப்ளட் சேம் ப்ளட் டாஸ்க்கில் பர்பாமன்ஸ் அடிப்படையில் 1-13 வரை தரவரிசைபடுத்த வேண்டும். நீங்களே உங்களுக்குள்ள அடிச்சுட்டு முடிவுக்கு வாங்கடானு சொல்லிட்டாரு பிக்பாஸ்.

எல்லாரும் ஒரே நேரத்துல பேசி தலைவலி வர வச்சுட்டாங்க. அதனால தனிதனியா ஒவ்வொருத்தரும் என்ன செஞ்சாங்கனு சுருக்கமா எழுதிடறேன்.

ஆரி

தரவரிசை நிர்ணயிப்பதை எந்த தகுதியின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று முதலில் பேச ஆரம்பித்தது ஆரி தான். அதை தொடர்ந்து தான் மத்தவங்களும் பேச ஆரம்பிச்சாங்க. ஆனா இந்த வாரம் முழுவதுமே ஆரி ரொம்ப அமைதியா இருக்காரு. நேத்தும் தன்னோட கருத்தை ஸ்ட்ராங்கா பேசாதது குறையாக தெரிந்தது. ஆரி கொஞ்சம் குரலை உயர்த்தி அழுத்தமா பேசிருந்தா, நேத்து சலசலப்பு கொஞ்சம் கம்மியா இருந்திருக்க வாய்ப்பு இருக்கு. தனிப்பட்ட கருத்து மோதல்ல சத்தமா பேசறவரு குழு விவாதங்களில் அவர் குரலை தேட வேண்டியிருக்கு. ஓட்டெடுப்பு பலதடவை நடத்தினதும் குறிப்பிடத்தக்கது.

ரமேஷ்

இந்த வாரம் ரமேஷ் தான் கேப்டன். அந்த அதிகாரத்தை அவர் முழுமையா பயன்படுத்தினாரானு கேட்டா, இல்லேன்னு தான் சொல்லனும். ஒரு கேப்டனா இறுதி முடிவு எடுக்க முடியாது. ஆனா தரவரிசை எப்படி நிர்ணயம் செய்யப்போறோம்னு முடிவெடுக்க ரமேஷுக்கு அதிகாரம் இருக்கு. ஆனா அவர் அதை யூஸ் பண்ணவே இல்லை. ஒரு கேப்டனா அவர் கடமையை சரியா செய்யலைனு உறுதியா சொல்ல முடியும். சந்தைக்கடை மாதிரி ஆளாளுக்கு பேசிட்டு இருந்தது அவருக்கு பிடிக்கலை. அதனால ரொம்பவே சிடுமூஞ்சியா இருந்தாரு. சனம் கூட அவர் போட்ட சண்டை கமல் சார் முன்னாடி பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாலா

தன்னை முன்னிறுத்திக்க பாலா சொன்ன லாஜிக் எல்லாருக்கும் பொருந்தும். ஆரி கூட பேசும் போது பாலா தான் போன் கட் பண்ணி நாமினேட் ஆனார். ஆனா அதுக்கு அவர் சொன்ன விளக்கம் "என்னையே நான் செல்ப் நாமினேட் பண்ணிகிட்டேன்" என்பது. அதாவது போன் கட் பண்ணின மத்தவங்க ஒருத்தரை காப்பாத்தனும்னு செஞ்சதாகவும், தான் செஞ்சது அப்படி இல்லை என்பதும் பாலாவோட வாதம். செல்ப் நாமினேட் செய்து கட்ப்ண்டாலும் அங்கே இன்னொருவர் காப்பாற்றப்படுகிறார். அதனால் மற்றவர்கள் செய்ததற்கும் பாலாவுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் பாலா மடை மாற்றியதை யாருமே கண்டு கொள்ளவில்லை.

ஆரிக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை சொல்லித்தான் பாலா வாயை அடைத்தார்கள். இன்று மீண்டும் சனத்துடன் தகறாரு. சனமுடன் பேசியதற்கு தன் ஷூவை கழட்டி அடித்துக் கொண்டார் பாலா. கோபம் அதிகமாகும் போது என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. அதை வேறு பெருமையாக சொல்லிக் கொள்கிறார் பாலா. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்டித்ததை போல், பாலா செய்தது மிக தவறான செயல். சனத்தை அவமானப்படுத்தும் செயல். சட்டென்று கோபத்தில் வார்த்தைகளை விடும் பழக்கத்தை முதலில் விடவேண்டும் பாலா.

சனம்

எவிக்‌ஷன் ப்ரீ பாஸ், எவிக்‌ஷன் டாப்பிள் கார்டு இந்த இரண்டிலும் சனம் இருந்தார். சுரேஷின் புத்திசாலித்தனத்தாலும், சனமின் முட்டாள்தனத்தாலும் ப்ரீ பாஸ் முதல் ஆளாக வெளியேறினார். டாப்பிள் கார்ட் டாஸ்க்கில் கடைசி வரை இருந்த போது அவர் தான் வெற்றியாளர். ஆனால் மீண்டும் தனது முட்டாள்தனத்தால் அந்த வாய்ப்பை இழந்தார். அதனால் இந்த வாய்ப்பை பெற்றே ஆக வேண்டுமென்று, ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்டார் போல. ஆனால் இந்த ரேட்டிங்ஸால் என்ன பயன் கிடைக்கப் போகிறது என்பதை சிந்தித்து பார்க்க தவறிவிட்டார். இந்த ரேட்டிங்ஸால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.(இப்போது வரை இங்கும் பிக்பாஸ் ஒரு டிவிஸ்ட் வைத்தால் நல்லாருக்கும். )

பாலாவுடனான சண்டையில் இருவருமே பரஸ்பரம் அவமானபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள் போல. இவர்கள் இருவரின் சண்டை பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. இறுதியில் யாருடைய வார்த்தையையும் ஏற்காமல் முதல் இடத்தில் இருந்து பிடித்து விட்டார். ஆனால் ஹவுஸ்மேட்ஸில் வெறுப்புக்கு ஆளாகலாம்.

அனிதா

ஆரம்பத்தில் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. ஆனால் இடையில் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. ஆரி ஒரு முறையும், கேப்பி ஒரு முறையும் வாக்கெடுப்பு நடத்தியதில் அனிதாவின் இடம் பறிபோனது. அதில் கடுப்பான அனிதா எனக்கு ஆட்டமே வேண்டாம் என்று அமர்ந்து கொண்டார். யார் மாட்டப் போகிறார்களோ.

அர்ச்சனா

முதல் இடத்துக்கு சிறிது நேரம் போராடி விட்டு ஒதுங்கி கொண்டார். விட்டுக் கொடுக்கறது இவங்களுக்கு பழக்கமே இல்லையா என்று சக போட்டியாளர்களை பார்த்து கடிந்து கொண்டார்.

ஷிவானி, ரம்யா, நிஷா

ரம்யா, ஷிவானி குரலாவது கொஞ்சம் கேட்டுச்சு. நிஷா போய் 13 வது இடத்துல நின்னுட்டாங்க.

ரியோ, சோம், கேப்பி

ஆரி சோர்ந்து போன போது வாக்கெடுப்பு நடத்தவும் செய்தார்கள். ஆனால் முறையான பங்களிப்பு இல்லை.

ஒரு வழியாக 13 பேர் தரவரிசை நிரப்பட்டது. அனிதா நிற்க மறுத்து விட்டார்.

நள்ளிரவு பாலா பர்த்டே கொண்டாடப்பட்டது. தனது தங்கையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கினார். இதுவரைக்கும் ஹர்ட் பண்ணினதுக்கு சாரி, ஆனா இனிமேலும் ஹர்ட் பண்ணுவேன்னு சொல்லி கேக் வெட்டி கொண்டாடினார். சனம் மட்டும் தனியாக இருந்தார்.

நாள் 61

என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா பாடலுடன் தொடங்கியது நாள்.

டாஸ்க் சரியா விளையாடததால் மொத்த லக்சரி பட்ஜட் பாயிண்டிலிருந்து 2000 பாயிண்ட்டை பறித்துக் கொண்டார் பிக்பாஸ். மிச்சம் இருந்த 600 பாயிண்டுக்கு ரவையும், சத்துமாவும் வாங்கிக் கொண்டனர்.

அதன் பிறகு விளம்பரதாரர் டாஸ்க். ஒருவருக்கு ஒருவர் விருது கொடுத்துக் கொண்டனர்.

இன்றாவது சுவாரஸ்யம் இருக்குமா என்று பார்க்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>