108 எம்பி காமிராவுடன் மி10ஐ: ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி முதல் விற்பனை

by SAM ASIR, Jan 5, 2021, 16:27 PM IST

இந்தியாவில், இந்திய பயனர்களுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்று மி10ஐ போன் குறித்து ஸோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ளவர்கள் விரும்பும் பல வசதிகள் மி10ஐ ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் முதன்மை காமிரா 108எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இதில் உள்ளன.

மி10ஐ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+; AMOLED; எச்டிஆர் 10 மற்றும் எச்டிஆர் 10+ தரத்திற்கு பொருத்தமானது (வைட்வைன் எல்1 சான்றிதழ் பெற்றது)
ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 120 HZ
இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல் (எஃப்எச்டி வீடியோ)
பின்புற காமிரா: 108 எம்பி (எச்எம்2 சென்ஸார்) + மூன்று 8 எம்பி காமிராக்கள்; அல்ட்ரா வைட், மாக்ரோ, டெப்த் சென்ஸார் கொண்டவை
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி ஆக்டா-கோர்; கோர்டெக்ஸ் ஏ-77
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MIUI12


மின்கலம்: 4820 mAh
சார்ஜிங்: 33W
நைட்மோடு 2.0, லாங்க் எக்ஸ்போஷர், டூயல் வீடியோ, போட்டோ மற்றும் வீடியோ குளோன் உள்ளிட்ட வசதிகள் இதன் காமிராக்களில் உள்ளன.

6ஜிபி+64ஜிபி மி10ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999/-
6ஜிபி+128ஜிபி மி10ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999/-
8ஜிபி+128ஜிபி மி10ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999/-

ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஜனவரி 7ம் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். அஅமேசான் மற்றும் மி தளங்களில் ஜனவரி 8ம் தேதி பகல் 12 மணி முதல் அனைவரும் வாங்கிக்கொள்ளலாம்.

You'r reading 108 எம்பி காமிராவுடன் மி10ஐ: ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை