108 எம்பி மெயின் காமிரா... செல்ஃபிக்கு 20 எம்பி காமிரா: மி 10டி ஸ்மார்ட்போன் விலைகுறைப்பு

ஸோமி நிறுவனத்தின் பிரிமீயம் பிரிவு ஸ்மார்ட்போனான ஸோமி மி 10டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தைக்கு வந்தது. இதில் இருவகைகள் உள்ளன. தற்போது ஸோமி மி 10டி ஸ்மார்ட்போனின் இரு வகைகளுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலையில் மி.காம் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்களில் இவற்றை வாங்கலாம்.

ஸோமி மி 10டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை சிம்
தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல் தரம்); கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
ரெஃப்ரஷ் விகிதம்: 114 Hz
இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி


சேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் கூடுதலாக்கலாம்)
முன்புற காமிரா: 20 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 108 எம்பி + 13 எம்பி + 5 எம்பி (டிரிபிள் ரியர் காமிரா)
பிராசஸர்: ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 865 பிராசஸர்; ஆட்ரினோ 650 ஜிபியூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MIUI 12
மின்கலம்: 5000 mAh
சார்ஜிங்: 33W

பக்கவாட்டில் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸார்) மற்றும் அகச்சிவப்பு உணரி (இன்ஃப்ரா ரெட் சென்ஸார்) உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கும் 6ஜிபி+128 ஜிபி மி 10டி ஸ்மார்ட்போன் ரூ.3,000/- விலைகுறைக்கப்பட்டு ரூ.32,999/- ரூபாய்க்கும் 8 ஜிபி+128 ஜிபி மி 10டி ஸ்மார்ட்போன் ரூ.34,999/- விலையிலும் கிடைக்கிறது.

READ MORE ABOUT :