இந்தியாவின் குடிமக்கள் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொருவருடமும், ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்டத்தின் போது இராஷ்ட்ரிய பவன் மாளிகையில் சாதனையாளர்களுக்கும், சிறப்பாக சேவை செய்தவர்களுக்கும் வழங்கப்படும். அந்த வகையில் 2021 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்ம விருதுகள் மூன்று வகையில் வழங்கப்படும். பத்ம விபூசண், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஶ்ரீ. பத்ம விபூசண் விருதுகள் தனித்துவமான மற்றும் மகத்தான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டில் 7 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த 7 நபர்களில் தமிழகத்தை சார்ந்த, மறைந்த பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 119 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 7 பத்ம விபூசண், 10 பத்ம பூசண் மற்றும் 102 பத்ம ஶ்ரீ விருதுகளாகும். இந்த விருது பெரும் நபர்களில் 29 பேர் பெண்கள், 10 நபர்கள் வெளிநாடுகளை சார்ந்தவர்கள் மற்றும் ஒருவர் மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர். இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியல் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/Padma-Awards-2021-announced.pdf