நீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை! 16-02-2021

கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் தங்கத்தின் மீதான விலை ஏற்றம், இறக்கம் என ஆட்டம் கண்டாலும், இந்த 2021 விலை ஏற்றத்தின் மீது பெரிய மாறுதல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் ஜனவரி மாதமும் தங்கத்தின் மீதான விலை ஏற்ற இயக்கத்திலேயே இருந்தது வந்தது. இதற்குக் காரணமாக கொரோனா பெருந்தொற்றும், அதனால் ஏற்பட்ட விளைவுகளின் தாக்கமும் ஏற்படுத்திய பாதிப்புகள் தான். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசானது 2021-2022 ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தங்கத்தின் மீதான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4457 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து, கிராமானது ரூ.4468 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1கிராம்- 4468
8 கிராம் (1 சவரன்) - 35744

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.4841 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.11 உயர்ந்து, கிராமானது ரூ.4852 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம்(24k)

1 கிராம் - 4852
8 கிராம் - 38816

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது கிராமிற்கு 90 பைசா உயர்ந்து , இன்று கிராமானது ரூ.75.50 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.75500 க்கு விற்பனையாகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :