தமிழில் வெளியான ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனை நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடந்தது. நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர். நடிகர்கள் பவன் கல்யாண், ராம்சரண், வருண் தேஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். தடபுடலாகத் திருமண விழா ஒரு வாரம் நடந்தது.
இதில் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று நடனம் ஆடினார்கள். திருமண விழா முடிந்து நிஹாரிகா தம்பதி திருமணம் ஐதராபாத் திரும்பினர். அங்கும் ஒரு திருமண வரவேற்பு நடைபெற்றது. உதய்பூர் செல்ல முடியாத உறவினர்கள், நண்பர்கள் ஐதராபாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து நிஹாரிகா, சைதன்யா கோயில்களுக்கு சென்றனர். பிறகு கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றனர்.
பின்னர் தேனிலவு பயணமாக நிஹாரிகா -சைதன்யா மாலத் தீவுக்குச் சென்றனர். கடல் அருகே நின்று கணவருடன் சைதன்யா ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை நிஹாரிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, சைதன்யாவை கடலாகக் காண்கிறேன் எனக் குறிப்பிட்டு மெசேஜ் பகிர்ந்தார். மற்றொரு தனி படத்தை நிஹாரிகா பகிர்ந்தார். இதை சைதன்யா படம் பிடித்திருந்தார். அதற்கு கேப்ஷன் கொடுத்த நிஹாரிகா வானமும் கடலும் சந்திக்கும் இடத்தில் என்னைச் சந்தியுங்கள் எனத் தெரிவித்திருந்தார். நிஹாரிகா-சைதன்யா ஜோடி மாலத்தீவில் புத்தாண்டு கொண்டாடினர். கொண்டாட்டங்கள் முடிந்து இருவரும் ஐதராபாத் திரும்பினர்.
நிஹாரிகா குடும்பம் சினிமா குடும்பம் என்பதால் நிஹாரிகா கணவர் சைதன்யாவும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல் பரவியது. இதுகுறித்து நிஹாரிகா தற்போது தெளிவான பதில் அளித்தார்.அதில், சைதன்யாவுக்கு நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. அவருக்குப் படம் பார்க்கத் தெரியும். அவர் வேறு சில காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணி உள்ளார். அதை நோக்கித்தான் சென்றுக் கொண்டிருக்கிறார் என்றேன். அதேபோல் சைதன்யா கூறும்போது, நடிக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. எதிர்காலத்தில் நிஹாரிகாவுடன் சேர்ந்து நடிக்கும் எண்ணம் ஏதுவும் இல்லை.