டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திடீர் சரிவு..!

Advertisement

நேற்றைய நிலவரப்படி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய்க்கு பக்கத்தில் வந்து பலருக்கு அதிர்ச்சி கொடுத்தது.

தொடர்ந்து சில நாட்களாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வந்த நிலையில், நேற்று ரூபாயின் மதிப்பு சரிந்தது சந்தை நோக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.99-லிருந்து 67.61-க்குள் சென்று வந்தது. ஆனால், நாளின் முடிவில் 67.86 ரூபாயாக நிலை கொண்டது.

திங்கள் கிழமை முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 67.43 என்ற இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று ரூபாய் - டாலர் பரிமாற்றம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன؟ `தொடர்ச்சியான வெளிநாட்டு பணம் வெளியேறுதலும், மாசக் கடைசியில் டாலர் தேவை அதிகரிப்பும் தான் இந்திய ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது' பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டீலர் ஒருவர் கூறியுள்ளார்.

திங்கள் கிழமை மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 795.06 கோடி ரூபாய்க்கு ஷேர்களை விற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. டாலரின் மதிப்பு தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு பல நாட்டு பணத்துக்கு எதிராகவும் அதிகரித்து வருகிறது.

இதற்கு பல்வேறு காரணம் இருக்கிறது. குறிப்பாக, இத்தாலியில் நடந்து வரும் அரசியல் சலசலப்பால் யூரோவுக்கு நிகரான டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் பல நாடுகள் அதன், கொள்முதலை அதிகரித்துள்ளது. இருப்பினும் கச்சா எண்ணைய் விலையில் எந்த பெரிய மாற்றமும் நடக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்தது, இந்திய ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்தியது.

ஆனாலும், இது போதுமானதாக இல்லை. சென்செக்ஸும் நேற்று 200 புள்ளிகள் சரிவு கண்டது. இதுவும் ரூபாய் வீழ்ச்சிக்கு ஓரு காரணமே.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
/body>