ஐசிஐசிஐ வங்கி சிஇஓ மீது குற்றச்சாட்டு: மறுக்கும் வங்கி நிர்வாகம்!

by Rahini A, Jun 1, 2018, 18:46 PM IST

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சாரை விசாரணை முடியும் வரையில் விடுப்பில் அனுப்பியதாக வெளிவந்த செய்திகளை வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது.

மேலும் சிஇஓ சந்தா தான் முன்னரே விண்ணப்பித்திருந்த வருடாந்திர விடுப்பு தான் எடுத்துள்ளார் என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரும் தனியார் வங்கிகளுள் ஒன்றான ஐசிஐசிஐ, சந்தா கோச்சார் தன்னுடைய நேர்மையின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் நேர்மையை நிரூபிக்கும் வரையில் விடுப்பில் இருக்குமாறு அறிவுறுத்தவே இல்லை என மறுத்துள்ளது.

மேலும் சந்தா கோச்சாருக்கு அடுத்ததாகப் பதவி ஏற்க இருக்கும் தலைமை நிர்வாக இயக்குநர் ஒருவரை இதுவரையில் தேர்வு செய்யவும் இல்லை என்றும் குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம்.

வீடியோகான் நிறுவனத்துக்காக வழங்கப்படும் கடன் தொகையில் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு நேர்மை இன்றி சந்தா கோச்சார் என்று முகம் தெரியாத நபரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறித்து சரியான முறையில் அந்நபர் மீதான விசாரணையை நடத்துவோம் என ஐசிஐசிஐ நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை