அமேசான் வழங்கும் கேஷ்பேக் ஆஃபர்- அதிரடிக் கொண்டாட்டம்!

by Rahini A, Jun 6, 2018, 21:39 PM IST

அமேசான் இந்தியா நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

இதற்காக வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையாக கேஷ்-பேக் ஆஃபர் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அமேசான் வலைப் பக்கத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் 1000 ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்தால் 250 ரூபாய் கேஷ் பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃபர் அறிவிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ தக்வலை அமேசான் பக்கத்தில் அதனது தலைவர் சிஇஓ ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன், சியாட்டில் நகரத்தில் தலைமை இடங்களைக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியது.

அதன் பின்னர் அமேசான் ப்ரைம் என்னும் சேவை, அமேசான் ப்ரைம் வீடியோ, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட், மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய பல அறிமுகங்களை இந்தியாவுக்கு அளித்தது.

இன்று இந்நிறுவனத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்லைனில் 1000 ரூபாக்கு ஷாப்பிங் செய்து ஆன்லைன் மூலமே பணம் செலுத்துவோருக்கு 250 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை