நீட் தேர்வினால் தொடரும் உயிர் பலி: திருச்சி மாணவி தற்கொலை

Jun 7, 2018, 08:27 AM IST

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், தமிழகத்தில் இருந்து எழுதிய 1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 39.55 சதவீதம் பேர் தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.
மேலும், தமிழக அளவில் கீர்த்தனா என்ற மாணவி முதலிடமும், இந்திய அளவில் 12ம் இடமும் பிடித்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு மாணவர்களின் உயிரை காவு வாங்கி வருகிறது.

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ப்ளஸ் 2வில் 1125 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரை தொடர்ந்து, திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வினால் தொடரும் உயிர் பலிகளால் சக மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நீட் தேர்வினால் தொடரும் உயிர் பலி: திருச்சி மாணவி தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை