பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நரேந்திர மோடி ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை

by Rajkumar, Sep 15, 2018, 10:33 AM IST

ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றம் என்பது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை அமலுக்கு வந்ததில் இருந்து பெட்ரோல் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் இரண்டு காசுகளும் என்றும் டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது.

அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிர தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் 84 ரூபாய் 19 காசுகள் என்று இருந்தது.

நேற்று மீண்டும் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது, இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

You'r reading பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நரேந்திர மோடி ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை