இணைய வர்த்தகத்தில் போட்டி: ப்ளிப்கார்ட் முடிவு

இணைய வர்த்தகத்தில் போட்டி: ப்ளிப்கார்ட்

by Rajkumar, Sep 18, 2018, 06:41 AM IST
இணையத்தின் வழியே சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அமேசானுடன் போட்டிபோட ப்ளிப்கார்ட் முன்வந்துள்ளது.
இணைய வர்த்தகத்தில் மல்லுக்கட்டும் நிலையில் ப்ளிப்கார்ட் அடுத்த கட்டமாக அமேசானுடன் இணையத்தில் மற்றொரு போட்டிக்கு தயாராகி உள்ளது.
 
இதன்படி, இணையத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருமாறு ஹாட்ஸ்டார் நிறுவன பங்குகளை ப்ளிப்கார்ட் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் வீடியோ சேவைக்கு போட்டியாக பால்மார்டின் பிளிப்கார்ட் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ப்ளிப்கார்ட் உடனான பேச்சுவார்த்தையை ஹாட்ஸ்டார் நிறுவனம் மறுத்த போதிலும் பங்குதாரர்கள் வந்தால் முன்வருவதாக தெரிவித்துள்ளது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை