ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

by Isaivaani, Sep 18, 2018, 07:11 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது ஆப்கானிஸ்தான்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, 50 ஓவருக்கு 249 ரன்கள் எடுத்தது. இதில், ரஹமத் ஷா 72 ரன்கள் எடுத்தார்.

பின்னர், இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்கள் எடுத்து அவுட்டானது. இதனால், 91 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபாரமாக வெற்றிப்பெற்றது.

ஆசிய கோப்பை வரலாற்றில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை