கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்

by Ari, May 1, 2021, 16:53 PM IST

காதலுக்கு எந்த கொரோனாவும் தடையாக இருக்க முடியாது - தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ்.

IPL தொடரின் 14 வது தொடர் நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்களுடன் சேர்த்து அவரது குடும்பத்தினரும் பயோ பபுளில் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. வீரர்கள் ஒவ்வொரு நகரங்களுக்கு மாறும் போதும் அவரது மனைவிகளும் பாதுகாப்பான முறையில் உடன் அழைத்துச்செல்லப்படுகிறார்கள்

இந்நிலையில் 24 வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் அமர்ந்திருந்த தன் மனைவி தேவிஷா ஷெட்டிக்கு அருகே வந்தார். கொரோனா காரணமாக பார்வையாளர் பகுதிக்கும் மைதானத்துக்கும் இடையே கண்ணாடி மூலம் அடைக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் வெற்றியின் மகிழ்ச்சியில் கண்ணாடியில் முத்தம் கொடுக்க, அவரது மனைவி மறுபுறம் கண்ணாடி மீது தனது கண்ணங்களை வைத்து பெற்றுக்கொண்டார்.

அப்போது அங்கு இருந்த சாஹீர் கானின் மனைவி சகாரிகா இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். சமூகவலைதளத்தில் வெளியனோ அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் காதலுக்கு எந்த கொரோனாவும் தடையாக இருக்க முடியாது எனக்கூறி வைரலாக்கி வருகின்றனர்.

You'r reading கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல் Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை