கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!

by Ari, May 1, 2021, 17:06 PM IST

ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வார்னருக்கு பிளேயிங் 11லும் வாய்ப்பு கிடைக்காது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 6 போட்டிகளில் மொத்தம் 5 போட்டிகளில் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அறிக்கை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஹைதராபாத் அணி, மிகுந்த ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை. வார்னர் ஹைதராபாத் அணிக்காக நிறைய செய்திருக்கிறார், இந்த நிலையில் அணியின் கேப்டனை மாற்றி இருக்கிறோம் என்று ஹைதராபாத் அணி குறிப்பிட்டுள்ளது.

வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் அணியின் வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனை மாற்ற போவதாக ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது. இதனால் வார்னருக்கு பிளேயிங் 11லும் வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டேவிட் வார்னர் மீது அணி நிர்வாகம் மிகுந்த கோபத்தில் உள்ளது. அதனால் ஆடும் அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். மற்ற வெளிநாட்டு வீரர்கள் அணியில் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். வாய்ப்பு அதன்படி பிரைஸ்டோ, கேன் வில்லியம்சன், ஜேசன் ராய், ரஷீத் கான் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இனி ஆட வாய்ப்புள்ளது. வார்னருக்கு இனி வரும் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது.

You'r reading கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை