யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!

by Madhavan, May 1, 2021, 12:32 PM IST

பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு இணையாக தன்னுடைய ஒல்லியான உடலை சட்டையை கழட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹால்.இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடிய நடப்பு ஐபிஎல் சீசனின் 26வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 145/8 ரன்களை மட்டுமே எடுத்து சொத்தப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி மிகவும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பரிதாபமாக தோற்றது. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்த பஞ்சாப் அணி இப்போது உத்வேகம் பெற்றுள்ளது. இந்த சீசனில் 3வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பாயிண்ட் டேபிளில் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டி முடிந்தப் பின்பு இரு அணி வீரர்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் தன்னுடைய ஜெர்சியை கழட்டி கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதனை பார்த்த சஹாலும் தன்னுடைய ஜெர்சியை கழட்டி போஸ் கொடுத்தார். இருவரும் பாடி பில்டர்களைப் போல போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You'r reading யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை