தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!

Advertisement

தோனி போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு குட்லக் சொல்வது, கங்கிராஜுலேஷன், போன்ற சாதாரண உத்வேக வார்த்தைகளைக் கூட அவர் கேப்டனாகப் பயன்படுத்த மாட்டார் என்று இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021-ல் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது, பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை காலி செய்தது, நேற்று வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் பாயிண்ட் டேபிளில் சிஎஸ்கே முதலிடத்தை பிடித்துள்ளது. `மீண்டும் சிங்கம் உறும தொடங்கிவிட்டது என்றெல்லாம் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனி குறித்து இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்போர்ட்ஸ் டுடே ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``எம்.எஸ்.டி. (தோனி) ஒரு போதும் சக வீரர்களிடத்தில் போட்டிக்கு முன்பாக குட்லக் என்றோ ஆல் த பெஸ்ட் என்றோ கூறியதில்லை. ஏனெனில் அவ்வாறு அவர் சில வீரர்களுக்கு கூறியிருக்கிறார். ஆனால் அது வேறு விதமாக முடிந்ததால், அவர் அந்த குட்லக், ஆல் தி பெஸ்ட் சொல்லும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

ஒரு முறை நாங்கள் வீரர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் இருக்கும் செண்டிமெண்ட்ஸ், நம்பிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அப்போதுதான் தோனி சொன்னார், தான் யாருக்கும் குட்லக் என்றோ ஆல் த பெஸ்ட் என்றோ கூறுவதில்லை. ஏனெனில் அதற்கு மாற்றாக நிகழ்ந்து விட்டால் அபத்தமாக இருக்கும்.அதே போல யாரும் தோனியிடமிருந்து எதிரணி வீரர்கள் உட்பட யாரும் ஆசிகளையும் எதிர்பார்த்ததும் இல்லை” என்று பிராக்யன் ஓஜா கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!
/body>