இது மோடி ஏற்படுத்திய பேரழிவு - மம்தா பானர்ஜி காட்டம்!

Advertisement

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை, மோடி ஏற்படுத்திய பேரழிவு என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பெருந்தோற்று பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். வட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மோடி அரசு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தவறி விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பெரும் துயரத்துக்கு பிரதமர் மோடியே காரணம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ``இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வீரியமாக உள்ளது. இதை மோடி ஏற்படுத்திய பேரழிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் தடுப்பூசியோ, ஆக்சிஜனோ எங்கும் இல்லை. இந்த பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு இருந்தபோதும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசியும், மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றை கட்டு்ப்படுத்துவோம் என மத்திய அரசு கடந்த 7 மாதங்களுக்கு முன்பே கூறியது.

ஆனால் தற்போது மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்காக வெளி மாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வந்து, பா.ஜ.க இங்கு தொற்றை பரப்புகிறது. மேற்கு வங்காளத்தை காப்பாற்றவும், அதன் தாய்மார்களின் பெருமையை பாதுகாப்பதற்குமான போராட்டமே இந்த தேர்தல் ஆகும். நமது மாநிலம் ஒரு வங்காள என்ஜின் அரசால் நடத்தப்படும். மோடியின் இரட்டை என்ஜின் அரசால் அல்ல.நமது மாநிலத்தை குஜராத் கைப்பற்றவோ, டெல்லியில் இருந்து ஆளவோ அனுமதிக்கமாட்டோம்.

வங்காளத்தை வங்காளமே ஆளும். குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பா.ஜனதா பேசுகிறது. ஆனால் மேற்கு வங்காளத்துக்கு அகதியாக வந்த அனைவருக்கும் நில உரிமை வழங்கப்படும்.நீங்கள் அனைவரும் இந்த மாநிலத்தின் குடிமக்கள். எனவே கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு காவலாளியாக நான் இருப்பேன்” என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>