ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

by Madhavan, Apr 23, 2021, 16:02 PM IST

மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா, சென்னை இடையேயான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடந்த சுவாரஸ்யம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. தோனி இஸ் பேக் என்ற ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் நடந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்களின் மனங்களுக்கு இதமான வருடலாக ஒர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கொல்கத்தா அணி வீரரும், தனது முன்னாள் சக வீரருமான ஹர்பஜன் சிங்கின் காலைத் தொட்டு சுரேஷ் ரெய்னா வணங்குவதை பார்க்க முடிந்தது.
ஹர்பஜன் சிங் களத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்த சுரேஷ் ரெய்னா மரியாதை நிமித்தமாக ஹர்பஜன் சிங்கின் காலில் தொட்டு வணங்குவதற்காக கீழே குணிந்தார்.

இருப்பினும் சுரேஷ் ரெய்னாவின் செயலை பார்த்து திக்குமுக்காடிப் போன ஹர்பஜன் சிங் தனது காலை ரெய்னா தொட்டுவிடாதபடி உட்கார்ந்து பின் அவரை தூக்கி கட்டியணைக்கிறார்.
முன்னதாக ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து இருவருக்கிடையேயான அன்பால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசத்தில் மூழ்கினர். பல ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய போதிலும் களத்தில் எந்த வித ஈகோவுமின்றி சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் காலில் விழுந்ததை ரசிகர்கள் சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.

You'r reading ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை