ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படையுங்கள் – கொதிக்கும் கெஜ்ரிவால்!

by Madhavan, Apr 23, 2021, 16:26 PM IST

நாட்டிலுள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை படாதபாடு படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பில் நாட்டில் தலைநகரமான டெல்லி திணறி வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் என்ன செய்வதென்றே தெரியாமல் மாநில அரசு விழி பிதுங்கி நிற்கிறது. டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வெகுவாக உள்ளது. இன்னும் சில மணிநேரங்களுக்குத்தான் ஆக்ஸிஜன் இருக்கும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவமனைகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்துவருகின்றன.

இதனிடையே டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் வரும் வழியில் மற்ற மாநிலங்கள் அந்த ஆக்ஸிஜனை தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன்களை மற்ற மாநிலங்கள் தடுத்துநிறுத்தும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்துகொண்டு மோடியிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்.

கெஜ்ரிவால் பேசுகையில், ``நாட்டிலுள்ள அனைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளையும் ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவேண்டும் எனவும், டெல்லிக்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த வாகனங்களை பல மாநிலங்கள் தடுத்து நிறுத்தியதால அதற்கு தீர்வு தேவைஎனவும், எனவே ராணுவ பாதுகாப்புடன் டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் அளிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தடுப்பூசியைப் பொறுத்தவரை மத்திய அரசுக்குக் கிடைக்கும அதேவிலையில் மாநில அரசுகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் அவர்கோரிக்கை விடுத்தார்.

You'r reading ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படையுங்கள் – கொதிக்கும் கெஜ்ரிவால்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை