கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??

by Logeswari, Apr 27, 2021, 19:31 PM IST

இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்து இருந்தார்.

அதாவது நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்த அவர், சிகிச்சைக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் பிசிசிஐ மற்றும் நான் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு?? Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை