பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் எடுக்கலாம் என்ற உச்சவரம்பை வங்கி நிர்வாகம் நிர்ணயித்து அது நடைமுறையில் இருந்து வந்தது.
இந்த உச்சவரம்பை மேலும் குறைத்து, ஏடிஎம்களில் இருந்து ஒரு நாளுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய உச்சவரம்பை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.
இது, அனைத்து கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு நாளை (31.10.2018) முதல் அமலுக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனை தடுப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.