பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்!

BJP Govt destroying economy says Ramadoss

by Kani Selvan, Nov 8, 2018, 13:22 PM IST

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016, இதே நாளான நவம்பர் 8ம் தேதி இரவு மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் ரூ.500,ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.

இதையடுத்து, புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டுக்களை வெளியிட்டது மத்திய அரசு. இதை பெறுவதற்காக வரிசையில் நின்று இறந்தவர்கள் ஒரு புறம் இருந்தாலும், இதன் நோக்கம் நிறைவேறியதா? என்ற கேள்விக்கு இன்றளவும் விடை தேடலில்தான் உள்ளது. 

பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போக பணமதிப்பு நடவடிக்கையும் ஒரு காரணம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்த நடவடிக்கைக்கு ஆதரவு இருந்த போதிலும், பல தரப்பட்ட மக்கள் இன்றளவும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தே வருகின்றனர்.

மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருவதோடு, பணமதிப்பிழப்பின் இழப்பு குறித்து காங்கிரஸ் கட்சி இன்று தேசியளவில் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனிடையே, இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில்,

"₹1000,₹500 தாள்களை செல்லாததாக்கியது மட்டுமின்றி இந்தியப் பொருளாதாரமும் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறிய முதலீட்டில் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இந்த துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!" 

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

You'r reading பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்! Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை