தீபாவளிக்கு வருவேன்னு அடம்பிடித்த திமிருபுடிச்சவன் நிலை என்ன தெரியுமா?

thimiru pudichavan release delay

by Mari S, Nov 8, 2018, 13:11 PM IST

சர்கார் படத்துக்கு போட்டியாக தீபாவளியன்று விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், சர்கார் படம் 750 திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்ததால், திமிருபுடிச்சவன் படத்தை ரிலீஸ் செய்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து ரிலீஸ் தேதியை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிப்போட்டனர்.

மேலும், தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தரருக்கும் ஏற்பட்ட பிரச்னையால், படம் இம்மாதம் கூட ரிலீசாகுமா? என்பதும் சந்தேகமாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் இதற்கு முன் வெளியான காளி படத்தின் படுதோல்வியும் இதற்கு ஒரு காரணம் என சொல்கின்றனர். சண்டக்கோழி 2 படத்தை வாங்கிய அதே விநியோகஸ்தர் தான் திமிருபுடிச்சவன் படத்தையும் வாங்கியுள்ளார். அந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், இந்த படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யவேண்டும் எனவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் வரும் நவம்பர் 16ஆம் தேதி ரிலீசாகுமா என்பதிலும் டவுட்டுதான்.

 

 

You'r reading தீபாவளிக்கு வருவேன்னு அடம்பிடித்த திமிருபுடிச்சவன் நிலை என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை