தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன்.. உலக நாயகனின் கண்டிப்பு- கனிவு குரலில் பிக்பாஸ் 4..

by Chandru, Sep 5, 2020, 21:12 PM IST

கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் அடக்கியதுபோல் பிக்பாஸையும் அடக்கி போட்டுவிட்டதா?.. இப்படித்தான் போன மாதம்வரை குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தது.
அது போனா மாசம் என்று வடிவேலு பாணியில் பிளேட்டை திருப்பிப்போட்டுவிட்டார் கமல்.


இந்த மாதத் தொடக்கத்திலேயே பிக்பாஸ் தொகுப்பாளர் உலகநாயகன் கொடுத்த சிக்னலில் பிக்பாஸ் 4 புரோமோக்களாக குவிந்துக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நலமா..; என்ற நலவிசாரிப்புடன் வந்த கமல் அடுத்தடுத்து மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல் புரமோக்களில் பேசிக்கொண்டிருக்கிறார்.


இன்று, அன்னாத்த ஆடுறா ஒத்திக்க பாணியில் வீடியோ ஓப்பனிங்கில் ஒரு டான்ஸ் மூவ்மென்ட்டுடன் என்ட்ரி தரும் கமல் அடுத்து, சொன்னபடி கேளு.... என்ற பாடலுடன் புரோமோ ஆட்டத்தை தொடங்குகிறார்.


கொரோனா லாக்டவுன், விழிப்புணர்வு களை காமெடி கலந்த வீடியோக்களாக ஓடவிட்டிருக்கிறார். பிறகு பிக்பாஸ் அரங்கிற்குள் புதிய மெருகுடன் நுழையும் கமல்..
கடந்த 3 ஆண்டுகளாக பரிட்சயமான இந்த குரல், இப்ப உங்களுக்குள்ளேயே ஒலிக்க ஆரம்பிடுச்சி.. தப்புன்னா தட்டிக் கேட்பேன். நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என அசத்தல் பஞ்ச் தந்து அசத்தி இருக்கிறார்.

READ MORE ABOUT :

More Bigg boss News

அதிகம் படித்தவை