வனிதாவாக மாறிய அனிதா !!எமோஷனல் ஆகிய அறந்தாங்கி நிஷா !!நேற்று பிக் பாஸில் நடந்தது என்ன?

by Logeswari, Oct 7, 2020, 11:33 AM IST

சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து முதல் நாளான பிக் பாஸ் வீட்டில் ஷிவானியை வார்த்தையால் தாக்கி அவரை வம்புக்கு இழுத்தனர்.நேற்று இரவு 12 மணிக்கு இரண்டு புறாக்கள் பாட்டு பாடி கொண்டு மனம் விட்டு பேசி கொண்டு இருந்தனர். இதை பார்க்கும் பொழுது அடுத்த காதல் புறாக்கள் இவர்கள் தான்..

இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று பல காரசாரமான காட்சிகள் வெளியாகியது.அனிதா களத்தில் இறங்கி ஒரு சிறிய விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்கி சுரேஷிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவரின் மனதில் எண்ணி வைத்து இருந்த மாஸ்டர் பிளானை நேற்று அற்புதமாக அரங்கேற்றினார்.அனிதாவை நாம் சாதாரணமாக எடைபோட்டு விட்டோம்.ஆனால் அவர் தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த வனிதா.அவர் நேற்று பேசிய தோரணை,வார்த்தைகள் அப்படியே வனிதாவின் மறு பிறவி போல் தோற்றமளித்தது.இனிமேல் இந்த சீசனில் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிந்துவிட்டது.அதான் நமது சின்ன வனிதாவான அனிதா இருக்கிறாரே!!பிறகு பிக் பாஸ், வீட்டின் ஹவுஸ் மெட்ஸிடம் தங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சோக கதையை கூற சொல்லி அனைவரையும் அழவைத்து வீட்டார்.அதுவும் எப்பொழுதும் சோகத்தை முகத்தில் காட்டாத அறந்தாங்கி நிஷாவே கலங்கிவிட்டார்னா பாத்துக்கோங்க...நிஷாவின் கதையை கேட்டு நேற்று பிக் பாஸ் வீடே சோகத்தில் ஆழ்ந்தது.வேல் முருகன் தன் அம்மாவை எண்ணி சூப்பரான ஒரு பாடலை பாடினார் அப்பாடலை கேட்டு மெய் மறந்து போன ஹவுஸ் மெட்ஸ்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.இரண்டாவது நாள் முழுவதும் சிறுது சண்டை,அதிக சோகம் ஆகியவை கொண்டு முடிந்தது.

Get your business listed on our directory >>More Bigg boss News