பிரபல நடிகை தந்த பேச்சுலரேட் பார்ட்டியில் கூத்து கும்மாளம்..

by Chandru, Oct 7, 2020, 11:39 AM IST

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, அஜீத்துடன் விஸ்வாசம், தனுஷுடன் மாரி, விஷாலுடன் பாயும் புலி உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால்.
இவருக்கும் மும்பை தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது.இருவருக்கும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. திருமணம் குறித்து காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

அதில், கவுதம் கிட்ச்லுவுக்கும் எனக்கும் இம்மாதம் (அக்டோபர்) 30ம் தேதி திருமணம் நடத்த முடிவாகி இருக்கிறது. மும்பையில் சிறிய அளவில் நெருக்கமான குடும்பத்தினர் நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். இது கொரோனா ஊரடங்கு காலகட்டமாக இருப்பதால் திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த எண்ணமில்லை. ஆனாலும் எங்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் பாசமும் அறிந்து த்ரில்லாக உணர்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக எனது திரையுலக பயணத்தில் நீங்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. தொடர்ந்து உங்களை நான் மகிழ்விப்பேன். தற்போது வாழ்க்கையின் புதிய பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து உங்களின் அன்பும் பாசமும் ஆதரவும் எங்கள் மீது பொழிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்களது முடிவில்லா ஆதரவுக்கு எனது நன்றி என்றார். திருமணம் என்றதுமே காஜலுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் அத்துடன் நெருங்கிய தோழிகள் செல்போனில் அழைத்து பேச்லரேட் பார்ட்டி எப்போ தரப்போகிறீர்கள் என்று கேட்டு நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.

நெருங்கிய தோழிகள் கேட்டால் சும்மா இருக்க முடியுமா? பார்ட்டிக்கான ஏற்பாடுகளை உடனே செய்து கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஏற்ப நெருக்கமான தோழிகளை மட்டும் அழைத்து பார்ட்டி தந்தார். காஜலின் தங்கை நிஷாவும் பார்ட்டிக்கு வந்தவர் களை கவனித்துக் கொண்டார். தோழிகளுடனும் தங்கையுடனும் பாடலை சுழலவிட்டு காஜல் ஆடிப்பாடி மகிழ்ச்சியை கொண்டாடினார். சினிமாத்தனம் இல்லாத நிஜ பார்ட்டி என்பதால் காஜலின் முகத்தில் திருமண கலையும் அத்துடன் வெட்கமும் சேர்ந்துக் கொண்டது. பேச்லரேட் பார்ட்டியின் புகைப்படங்களை நிஷா வெளியிட அது நெட்டில் தீயாகப் பரவி வருகிறது.காஜலுக்கு 30ம் தேதி திருமணம் முடிந்த பின்னும் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News