நவம்பர் மாதம் மாநாடு படப்பிடிப்பு தொடக்கம்..!

by Chandru, Oct 7, 2020, 11:46 AM IST

கொரோனா ஊரடங்கு 5 மாதத்துக்குப் பிறகு கிட்டதட்ட ஒய்ந்து இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்லத் தொடங்குகிறது. பேயை விட்டால் பேயோடு வாழ கற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த நிலைதான் தற்போது கொரோனாவோடு எச்சரிக்கையாக வாழ கற்றுக்கொள் என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள். ஒருபக்கம் கொரோனா வைரஸை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு மறுபக்கம் வாழ்வாதாரத்திற்காக மக்கள் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

சினிமாவின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கிவிட்டார்கள்.
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது. அதற்குள் இப்படம் பற்றிப் பல சர்ச்சை விஷயங்களை ஒரு சிலர் கிளப்பினர். படம் டிராப் செய்யப்படுவதாகவும் கிளப்பிவிட்டனர்.

ஆனால் அதற்குப் பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகுந்த பதிலடி கொடுத்தார். மாநாடு படப்பிடிப்பு கொரோனா தடை காலம் முடிந்ததும் தொடங்கும் என்றார்.
இந்நிலையில் சுசீந்திரன் இயக்கும் கிராமத்துப் படத்தில் சிம்பு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் உள்ள கிராமத்தில் தொடங்கியது. 30 நாட்களில் இப்படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பு பற்றி புதிய அப்டேட்டை விடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நவம்பர் 1ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் . இதில் சிம்பு ஜோடியாகக் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்,ஜே.சூரியா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News