தென்னிந்திய படத்தை தவறாக பேசினாரா..? விமர்சகர்களுக்கு பதிலடி தந்த நடிகை...!

South Indian film industry is close to my heart :Shruti Haasan

by Chandru, Oct 7, 2020, 11:54 AM IST

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் சூர்யா நடித்த 7ம் அறிவு படம் மூலம் அறிமுகமானார். விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தவிரத் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு எஸ்3 (சிங்கம்3) படத்தில் நடித்த பிறகு அடுத்த 2 வருடம் படத்தில் நடிக்காமல் ஒதுங்கினார்.

வெளிநாட்டில் பாப் இசை பாடல் நிகழ்ச்சி, பாய் பிரண்டுடன் டேட்டிங் என நாட்களைக் கடத்தினார். எல்லாவற்றையும் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வந்தவர் மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். தமிழில் லாபம் மறூம் தெலுங்கு படங்களில் நடிப்பதுன் ஆங்கில் வெப் சீரீஸ் ஒன்றிலும் நடிக்கிறார்.

சமீபத்தில் ஸ்ருதி அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்தியப் படங்களை குறிப்பாக தெலுங்கு படங்கள் பற்றி தவறான கருத்து கூறியதாகத் தெலுங்கு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின. இது ஸ்ருதியின் கவனத்துக்கு வந்தது. அதற்கு அவர் பதிலடி தந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது:சில தெலுங்கு வெளியீடுகள் நான் கொடுத்த ஒரு தேசிய நேர்காணலின் மேற்கோளைத் தவறாகப் புரிந்து கொண்டு பொய்யான கட்டுரைகளை எழுதுகின்றன.

ரேஸ் குர்ரம் மற்றும் கபார் சிங் போன்ற படங்களில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்- பவன் கல்யாணுடன் நடிப்பது எனக்குத் திருப்புமுனையானது. தெலுங்கு மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் நானும் நடிப்பது என் இதயத்தின் ஒரு பகுதியில் இடம்பிடித்தவை உண்மையிலேயே. நான் நடித்த இந்தி படங்களுக்கும், தென்னிந்தியப் படங்களும் என்ற தலைப்பில் எனது பேட்டி எடுக்க கேட்கப்பட்டது. ஒருபோதும் அதை நான் விரும்பவில்லை.

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறி உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை