பிக்பாஸ்4ல் அடுத்த வாரம் வெளியேறும் 4 பேர் பட்டியல்.. வீடியோ புரோமோவில் பரபரப்பு..

4 Contetant selected for elemination from Big Boss House

by Chandru, Oct 7, 2020, 12:06 PM IST

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ்4 கடந்த 4ம் தேதி தொடங்கி இன்றைக்கு 4 நாட்கள் ஆகிறது. 16 பேர் போட்டியாளர்களாக வந்தவர்களில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துக் கொள்ளத் தொடங்கிப் பழகி வருகின்றனர். அதற்குள் ஒருவருக்கொருவர் முணுமுணுப்பு தொடங்கி விட்டது. நடிகை ஷிவானியை கார்னர் செய்வதுபோல் பலரும் பேசினர். சனம். ஷிவானிக்கு இடையே வாக்கு வாதமும் நடந்தது.

இதையடுத்து ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை பாதையில், நடந்த சில முக்கிய சம்பவங்களை உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் கூறினர். சனம் ஷெட்டி, வேல்முருகன் ஆகியோரும் சொந்த கதை சோகக் கதையைச் சொன்னார்கள். மீதமுள்ள 13 பேர்களின் மறக்க முடியாத கதையை விரைவில் சொல்லக்கூடும். அறந்தாங்கி நிஷா தனது குழந்தையுடன் சென்றபோது சிக்கிய விபத்து பற்றிச் சொல்லிக் கலங்க வைத்தார். மற்றவர்களும் தங்களின் கதைகளைச் சொல்லக் காத்திருக்கிறார்கள்.

இன்னும் ஆடவே ஆரம்பிக்கலே அதுக்குள்ள அவுட்டா என்று கேட்பதுபோல் இன்றைக்கு வெளிவந்துள்ள பிக்பாஸ் புரோமோவில் அடுத்த வாரம் எலிமினேஷனில் வெளியேறப் போகும் ஒரு போட்டியாளருக்கு 4 பேர் பெயரை அறிவித்துள்ளனர். அவர்களை பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்திருக்கிறார். ரேகா, சனம் செட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகிய 4 பேர்களின் பெயரை எலிமினேஷனுக்கு பாலாஜி பரிந்துரைக்க அதை பிக்பாஸ் உறுதி செய்கிறார்.

4 பேரையும் எதற்காக எலிமினேஷனுக்கு பாலாஜி தேர்வு செய்தார் என்பதற்கான காரணங்கள் ஏற்கக் கூடியதாக இருக்கிறதா என்பதை ஆடியன்ஸ் தான் தீர்மானிக்க வேண்டும். புரோமே வெளியானதிலிருந்தே சனம் செட்டி அல்லது ரேகா இவர்களில் ஒருவர் வெளியேறுவார்கள் என்ற தர்க்கம் நடந்து வருகிறது. இவர்களின் தர்கத்துக்கு சீக்கிரமே விடை கிடைத்து விடும் .பிக்பாஸ்4 வீட்டுக்குள் இப்போதுள்ள சூழலைப்பார்த்தால் அண்ணா, தங்கச்சி என்று பாசமலராகவே பழகிக் கொண்டிருக்கிறார்கள், யாரும் காதல் கிசுகிசுவில் சிக்குவதுபோல் தெரிய வில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை