மொட்டை அங்கிளின் வில்லத்தனம்.. ஆஜித் பெற்ற விலையில்லா மதிப்பு.. ரம்யாவின் தங்க குணம்.. பிக் பாஸின் 9வது நாள்?

what happened in bigg boss 9th day

by Logeswari, Oct 14, 2020, 16:44 PM IST

சென்ற வாரத்தை விட நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான பல நிகழ்ச்சிகள் நடந்தது. ஆரம்பமே மொட்டை சுரேஷுக்கும் ஆஜித்க்கும் சண்டை முட்டிக் கொண்டது. அதன் பின் நம் பிக் பாஸ் நாரதர் வேலையை சிறப்பாக கையாண்டு ஒரு போட்டியை வைத்தார்.

இந்த வாரம் வெளியே போக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு என்று போட்டியை தொடங்கி வைத்தார் பிக் பாஸ்.அந்த நிகழ்ச்சியில் மொட்டையின் வில்லத்தனத்தை கடைசியில் தான் ரம்யாவுக்கு புரிய வந்ததது. பார்க்க தான் மொட்டை ஆனால் பண்றவேலை எல்லாம் மோசம்.. மொட்டை உள்ளே பேசியதை பிக் பாஸ் வெளியே உள்ள ஹவுஸ் மெட்சுக்கு வெட்ட வெளிச்சமாக திரையில் காண்பித்தார். அதில் அவர் பேசிய வில்லத்தனத்தை போட்டியாளர்கள் கேட்டு மிகவும் கொந்தளித்தனர்.

அதன் பிறகு தேவையில்லாமல் நிஷா, ரியோ மற்றும் வேல் முருகன் ஆகியவரின் பெயரை இழுத்தார். சுரேஷ் வெளியே வந்தவுடன் சுரேஷ் மற்றும் ரியோவுக்கும் மோதல் உண்டானது. பிறகு ஒரு வேஷ்டி விஷயத்தில் வேல் முருகன் சீறி கொண்டு சுரேஷிடம் சண்டை பிடித்தார். ரம்யாவின் மென்மையான குணத்தால் போட்டியில் தனது தம்பியான ஆஜித்கு மன பூர்வமாக சமாதானம் அடைந்து விட்டு கொடுத்தார். இது மக்களிடையே ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு பெற்றது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Bigg boss News

அதிகம் படித்தவை