அட்டகாசமான கெட்டப்பில் ஆண்டவர் வருகை ரியோவை நக்கலடித்த கமல் பிக் பாஸின் வெற்றிகரமான 13வது நாள்!

what happened in Bigg boss 13th day

by Mahadevan CM, Oct 18, 2020, 11:09 AM IST

ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார். பார்க்கவே நல்லாருந்தது. வீட்டுக்குள்ள கெட்டவங்கனு நினைச்சவங்க ஹீரோ ஆகற லெவலுக்கு வந்துட்டாங்க. அப்ப நாம நல்லவங்கனு நினைச்சவங்கனு, கேட்டு, ஒரு குறும்பு பார்வையோட நிகழ்ச்சியை ஆரம்பிச்சார்.

குரூப்பிசம் பத்தி இண்ட்ரோ கொடுத்து, நல்லது செய்யற குரூப்ல இருக்கலாம்னு ஒரு பன்ச் பேசினாரு. உள்ளுக்குள் குரூப்பிசம் இருக்குனு சுரேஷ் சொன்னதை கமலும் சொல்றாரு. இப்ப வரைக்கும் அப்படி ஒன்னும் பார்ம் ஆகல.. போன தடவை குரூப்பிசம் நடக்குதுனு நாம இங்க கதறிட்டு இருக்கும் போது, அதை நேரடியா கண்டிக்காம, கண்டுக்காம விட்டுட்டு, இப்ப இல்லாத குரூப்பிசத்தை பத்தி பேசறாங்க. அப்படின்னா உள்ள குரூப்பிசம் உருவாகனும்னு நினைக்கறாங்க போல. என்னமோ திட்டம் இருக்கு......

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.

குலேபா பாடலுக்கு எல்லாரும் சோம்பலா ஆடினாங்க. சனம் மட்டும் "எக்ஸ்ட்ரா" உற்சாகத்தோட ஆடினாங்க. ஹி ஹி.... காலைலேயே மத்தி மீன் கொடுத்து அனுப்பிருக்காரு பிக்பாஸ். அதுவும் மீனுக்குட்டி அலைஸ் ரேகாவுக்கு. நானே என் கையால செஞ்சு தரேன்னு சொன்னாங்க ரேகா. ஒரு வேளை எவிக்சன் ரிசல்ட் தெரிஞ்சுருச்சா?.... ரேகாவுக்கு மட்டும் மீன் அனுப்பினதை வச்சு பிக்பாஸை. ஓட்டிட்டு இருந்தாங்க நிஷா..

மீன் சமைக்கறதை பத்தி சுரேஷ், பாலா, சனம் இருந்த இடத்துல ஒரு விளக்கம் கொடுத்துட்டு போனாங்க ரேகா. இன்னிக்கு மீன் குழம்பு செஞ்சா மிச்சமானா நாளைக்கு கூட சாப்பிடலாம்னு பாலா சொல்லவும், மிச்சம் இருக்காது, ஆளுக்கு ஒரு பீஸ் தான்னு சனம் சொல்லவும் ஆரம்பிச்சது வினை. பாலா - சனம் சண்டை 636வது தடவையா நடந்தது. அனிதாவை அக்கானு கூப்பிடற பாலாஜி அதை விட வயசுல மூத்த சனமை மதிக்கறதே இல்லை. பேசவே கூடாதுன்னா எப்படி.... இதுல சுரேஷை நடுவரா வச்சு பஞ்சாயத்து வேற. அடுத்ததா ஹவுஸ்மேட்ஸ் எல்லாருக்கும் ஒவ்வொரு உண்டியல் கொடுத்தாங்க. எல்லா உண்டியல்லேயும் ஏதாவது ஒரு அனிமல் படம். அதுகு ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து எடுத்துட்டு போனாங்க. ஷப்பா.......

அடுத்து கேப்டனை பத்தின புகார் பெட்டி கார்டன் ஏரியால இருக்குனு பிக்பாஸ் சொல்லவும். சில பேர் போய் புகார் எழுதி போட்டாங்க. நீ என்னத்தையோ பண்ணிகிட்டு கிடனு சுரேஷ் தூங்கிட்டு இருந்தது, ஏதோ குறியீடு போலருக்கு.

அகம் டிவி வழியே அகத்திற்குள்.

ஸ்மார்ட்டா இருக்கீங்கனு யாரோ ஒருத்தர் சொல்ல, சரியா கேக்கலனு சொல்லி எல்லாரையும் சொல்ல வச்சாரு. கேட்டுச்சானு வழக்கம் போல ஆடியன்ஸ் பார்த்து கேட்டாரு. ஆடியன்ஸ் இருந்திருந்தா கைதட்டி குதூகலிச்சுருப்பாங்க.

அர்ச்சனவை வெல்கம் பண்ணி நலம் விசாரிச்சவரு, என்னோட மக்கள் பிரதிநிதி பட்டத்தை நீங்க எடுத்துகிட்டீங்களேனு ஜாலியா கலாய்ச்சாரு. 3 வருஷமா சொல்லிட்டு இருக்கேன், இவங்களும் நம்பிட்டாங்கனு மீண்டும் ஆடியன்ஸ் கை காமிச்சாரு.

ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லனும்னா நேத்து கமலோட உடல் மொழி அபாரம். சில டைமிங் கமெண்ட்ஸ் சுமாரா இருந்தா கூட அதை கமல் தன் ஸ்டைல்ல சொல்லும் போது அட்டகாசமா இருந்தது.

ஆர்கியுமெண்ட்ல ஆரம்பிச்சாலும் சனம், பாலாஜி சேர்ந்து ஜட்ஜா இருந்த பேஷன் ஷோ பத்தி சொன்னவரு, ஒத்துமையா இருந்தாலும் இவங்களுக்கு பிடிக்காதுனு மறுபடியும் ஆடியன்ஸை கை காட்டினாரு. அது சரி ஆண்டவரே சனம், பாலாஜி சண்டை போடாம இருந்த ஒரே இடம் அது தான். யாரோ தப்பா எழுதி கொடுத்துருக்காங்க ஆண்டவரே.

அடுத்து ரியோ- சுரேஷ் பிரச்சினை. யாராவது விமர்சனம் சொன்னா கேளுங்க, சொல்ல ஆரம்பிக்கும் போதே தடுக்காதீங்கனு அட்வைஸ் கொடுத்தாரு. ஆமா இது யாருக்கு சொல்றாருனு ரியோ ஒரு ரியாக்சன் கொடுத்துட்டு இருந்தான். பேஷன் ஷோல ரியோ-சுரேஷ் சண்டையை பத்தி பேசறாருனு ரியோவுக்கு தெரியல போல. அவரு எவிக்சன் ப்ரீ பாஸ்ல சுரேஷ் பேசினதுக்கு பதில் சொல்லிட்டு இருந்தாரு. குரூப்பிசம்னு பேசும் போது என் பேர் சொன்னாருனு ரியோ உறுதியா நம்பறாரு. ஆனா கமல் பேசினதை கேக்கும் போது அதுல ஏதோ சந்தேகம் இருக்கும் போல. இதுலேயும் ஆடியன்ஸை இழுத்து, அப்படியா? உங்களுக்கு ஞாபகம் இருக்கானு நக்கலா கேட்டது, ரியோவுக்காக தான் போல.

உள்ள இருக்கறவங்க முகமூடி கழண்டு போகனும்னு இவங்க எல்லாம் (ஆடியன்ஸ்) வெயிட் பண்ணும்போது, உள்ள ஒருத்தருக்கு வேட்டி பிரச்சினை வந்துருச்சுனு வேல்ஸை இழுக்க. சீரியஸ் பிரச்சினையை சிரிச்சுகிட்டே சொன்னாரு வேல்ஸ். கடைசிவரைக்கும் வேட்டியை பத்தி ஏன் அங்க பேசினாருனு சுரேஷ் கிட்டகேக்கவே இல்ல. போதாக்குறைக்கு அவரா ஏதோ தப்பா நினைச்சுகிட்டு அப்படி பேசிட்டாரு போலனு வேல்ஸே சுரேஷுக்கு வக்காலத்து வாங்கி பேசினது அதிர்ச்சி ரகம். அந்த பார்ட் முடிஞ்ச உடனே ஆரியும், ரியோவும் அதை சரியா சுட்டி காட்டினாங்க. ஆனா வேல்ஸ்க்கு அது புரியவே இல்லை.

ஆக குரூப்பிஸம், வேட்டி ரெண்டு விஷயத்திலேயும் சுரேஷ் எஸ்கேப் ஆகிட்டாரு. இதை பத்தி பேசும்போது கான்வர்சேஷன்னு தப்பா சொல்லிட்டு, உரையாடல்னு அழகா தமிழ்ல சொல்லிட்டு தொடர்ந்து பேசினாரு வேல்ஸ். உரையாடல்ங்கறது நல்ல தமிழ் வார்த்தை. உங்களை எல்லாம் தமிழ்ல பேச சொல்லிட்டு, நான்னிறைய இங்கிலீஷ்ல பேசறேன். ஏன்னா நான் பேசற தமிழ் இங்க சில பேருக்கு புரியவே இல்லைனு மறுபடியும் ஆடியன்ஸை கை காமிச்சாரு. எத்தனை தடவை.......

அடுத்து அர்ச்சனா கொடுத்த பட்டங்கள் பத்தின பேச்சு வந்தது. No comments simply waste. அவார்ட் பாலாவுக்கு கொடுத்ததை பத்தி பேச்சு வரவும், வேஸ்ட், நியூக்ளியர் வேஸ்ட்னு ஒரு புது ஐட்டத்தை எறிஞ்சாரு ஆண்டவர் அந்த அவார்டுக்கும் நீங்க பேசினதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ஆண்டவரே. இப்ப நாங்க எப்படி இதை கனெக்ட் செய்யறது சொல்லுங்க. முடியல....

அடுத்து சவாலான போட்டியாளர். சவால்ல கூட நேர்மையா இருக்கனும்னு க்ளாஸ் எடுத்தாரு. ரம்யாவுக்கு சுத்தமா புரியல. இது பாசிட்டிவா, நெகட்டிவானு கேக்க, நீங்க சந்தோஷமா இருந்தா அதை கெடுக்கறேன். இல்ல துக்கமா இருந்தா சந்தோஷத்தை கொடுக்கறேன்னு சொல்லி கைதட்டல் வாங்கினாரு. ரம்யாவும், சுரேஷும் மிக்சட் ரியாக்சன் கொடுத்தாங்க.

பல நாட்டு தலைவர்கள் கூட பொம்மை மாதிரி தான் இருக்காங்கனு சொல்லவும், வேல்ஸ் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டினாரு. இப்ப என்ன புரிஞ்சுதுனு கை தட்டுனீங்க வேல்ஸ்.... காணவில்லை ஆஜித்துக்கும், கேப்பிக்கும் அடிக்கடி பிரசண்ட் சார் சொல்லிடுங்கனு அட்வைஸ் பண்ணினாரு.

அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டுக்கு, தன்னோட நாயகன் படத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாரு. துணை நடிகர்கள் பத்தி சொன்னது நல்ல விஷயம். மிகச்சரியா எம் ஜி ஆர் ரெபரன்ஸ் யூஸ் பண்ணினது கமல்தனம்.

ஆமாஞ்சாமி கேஸ்க்கு வந்த போது, அன்னிலேர்ந்து நான் நோ மட்டும் தான் சார் சொறேன்னு கலகலத்தாங்க நிஷா. பட்டாசு பத்தி பேசும் போது மிடில் கிளாஸ் தீபாவளி பத்தி சொன்னது அசத்தல் ரகம். அந்த டைம்ல அனிதா ரொம்ப கனெக்ட் ஆனது தெளிவா தெரிஞ்சுது. டாப் ட்ரெண்டிங் டாபிக் வந்த போது, நல்ல ட்ரெண்டிங், கெட்ட ட்ரெண்டிங் வித்தியாசபடுத்த கமல் காட்டின உடல் மொழி அபாரம். வெல்டன். அனிதா அடங்கறா மாதிரி தெரியல.

தனிப்பட்ட முறையில தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை ஏத்துக்கற மனப்பக்குவம் வேணும். இந்த மாதிரி சபைல நம்ம தவறுகள் சுட்டிக்காட்டபடும் போது, அந்த உரையாடலை முடிக்கவாவது, நாம திரும்ப பேசாம இருக்கனும். இந்த ரெண்டுமே அனிதாகிட்ட கிடையாது. ரியோ, அர்ச்சனா சொன்னதை இன்னிக்கு கமலும் சொல்லி காட்டிட்டாரு. ஆனாலும் அனிதா மண்டைல ஏறலைங்கறது, நிகழ்ச்சிக்கு அப்புறம் அனிதாவும், சனமும் பேசிட்டு இருந்ததுல தெரிஞ்சுது. சனமும் இதே கேட்டகிரி தான். ஆகமொத்தம் நல்ல கூட்டணி.

திரும்ப அர்ச்சனாகிட்ட வந்தவரு, அவங்களுக்கு அட்வாண்டேஜ் இருக்குனு சொல்லவும், அர்ச்சனா அதை மறுத்து பேசினாங்க. இப்பவே எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கறாங்கனு அர்ச்சனா சொன்னதை, பிரேக் விட்டுட்டு, திரும்ப வந்து ஒரு மாதிரியா பார்க்கலாம்னு சொன்னது செம்ம டைமிங். அட்வைஸ் ஆரிக்கே அட்வைஸ் கொடுத்தாரு. கேக்கறவங்களுக்கு கொடுங்கனு சொன்னது நல்ல பாயிண்ட். எவிக்சன் ப்ரீ பாஸ் ஆஜித் கிட்ட பேசும் போது, அஜாக்கிரதையா இருக்கறதை சுட்டி காட்டினாரு. அடுத்த நாமினேஷன்ல இதே காரணத்தை சொல்லி அத்தனை பேரும் நாமினேட் செய்ய போறாங்க. அதுக்கப்புறம் இந்த வாரம் எவிக்‌ஷன்ல சேவ் ஆனவங்களை சொல்ல, பொட்டியெல்லாம் எடுத்து வச்சு, அதுக்கு ப்ராப்பர்டி செட் செஞ்சு, டயர்ட் ஆகிடுச்சு ஆண்டவரே...

ஆஜித்,ரம்யா, ஷிவானி சேவ் ஆகிட்டாங்க. இன்னிக்கு எவிக்சன் இருக்கு.

கமல் சார் போனதுக்கு அப்புறமா கேப்பியும், அர்ச்சனாவும் பேசிட்டு இருந்தாங்க. மேட்டரே இல்லாம ரெண்டு பேர் பேசினா எப்பஇ இருக்குமோ அப்படி இருந்தது. கடைசியா கட்டி பிடிச்சதை முதல்ல செஞ்சுருந்தா ரெண்டு நிமிசம் மிச்சம்.

மொத்தத்துல போன வாரம் அளவுக்கு மோசம் இல்ல. அங்கங்க ஆண்டவர் பளிச்சுனு தென்பட்டார். சில இடத்துல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான். ஆனாலும் அவரோட உற்சாகம், அட்டகாசமான பாடி லாங்வேஜ் எல்லாம் சேர்ந்து நேத்து ஷோவை காப்பாத்திருச்சு.

நாளை பார்ப்போம்.

You'r reading அட்டகாசமான கெட்டப்பில் ஆண்டவர் வருகை ரியோவை நக்கலடித்த கமல் பிக் பாஸின் வெற்றிகரமான 13வது நாள்! Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை