மழை வெள்ளத்தில் பாபுலர் நடிகையின் உதவிக்கரம்.

by Chandru, Oct 18, 2020, 11:10 AM IST

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குகிறது. தெலங்கானா மாநிலத்தில் மழை கொட்டித்தீர்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்பில் 122 பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து நடிகை சமந்தா தனது பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் உதவிக்கரம் நீட்டினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகிறர். இதற்காக பிரித்யூஷா அறக்கட்டளை சார்பில் தன்னார் வலர்கள் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு விநியோகித்து வருகின்றனர். சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதன்படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தநிலையிலும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டார் சமந்தா. கிரியா யோகா பயிற்சி பெற்றார். காஸ்டியும் டிசைன் மற்றும் சத்துள்ள உணவுகளை தயாரித்தளித்தல் என இன்னும் சில பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Get your business listed on our directory >>More Cinema News