பாலாஜிக்காக இரண்டு கன்னிகள் மோதிக்கொள்ளும் தரமான சம்பவம்.. பிக் பாஸின் 2வது ப்ரோமோ..!

by Logeswari, Nov 11, 2020, 20:49 PM IST

தனியார் தொலைக்காட்சியில் மக்களை கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும். வெளிநடப்பு எதுவும் அறியாமல் சிறப்பாக விளையாடி யாரு மக்களின் மனதை கவர்கிறார்களோ அவர்கள் தான் பிக் பாஸின் வெற்றியாளர்கள். இந்த வருடமும் பிக் பாஸ் 4 மிக பிரம்மாண்டமாக தொடங்க பெற்றது. முதல் இரண்டு வாரம் எதிர் பார்த்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாள் ஆக ஒவ்வொருவரின் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன விஷயத்தை கூட எப்படி ஊதி ஊதி பெரிதாக்குவதை அனிதா மற்றும் சனமை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலாஜியின் திமிர் பிடித்த பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. அதுவும் நேற்று நடந்த அண்ணன் தங்கச்சி டாஸ்கில் பாலாஜியும் ஷிவானியும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது. ஆரியின் சமத்துவ பேச்சு மக்கள் அனைவரையும் கவர்ந்தது. சோமு இப்பதான் வாயை திறந்து சத்தமாக பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பாலாஜிக்காக கேபி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தலை பிடித்து சண்டை போடாத குறை தான். மற்ற படி வார்த்தைகளால் நெருப்பை அள்ளி ஒருத்தர் மேல் ஒருத்தர் வீசி கொள்கின்றனர். எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்...

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை