மனு கொடுத்த 2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு வேலை : முதல்வர் அதிரடி

Advertisement

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது கையில் ஒரு மனுவிடன், தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் நின்றதைப் பார்த்தவுடன் முதலமைச்சர் தனது காரை நிறுத்தினார். அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அருகில் அழைத்து, என்ன வேண்டும் என்று கேட்க. அந்த பெண் ஐயா நான் குட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர். எனது பெயர் மாரீஸ்வரி. எனக்கு திருமணமாகிவிட்டது. எனது கணவர் சின்னத்துரை கூலி வேலைக்கு சென்று வருகிறார். எனக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. எனது கணவரின் வருமானம் குடும்பத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை.

நான் மாற்றுத்திறனாளி எனவே எனது குடும்பத்தினை காப்பாற்ற எனக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்று சொல்லி முதல்வரிடம் மனு அளித்தார். முதலமைச்சர் மனுவைப் பெற்றுக்கொண்டு, அந்த பெண்மணியை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்து வருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் மாரிஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் அந்த பெண்மணிக்கு வழங்கினார். பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர், இந்த பணியின் மூலம் மாதம் ரூ.15,000 ஊதியமாக கிடைக்கும் என்றும், எனவே இந்த ஊதியத்தை பெற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.

பணி நியமன ஆணையை முகமலர்ச்சியோடு பெற்றுக்கொண்ட மாரீஸ்வரி தனது வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் மனு அளித்தவுடன் எனது கோரிக்கையினை ஏற்று உடனடியாக வேலை வழங்கிய முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மனு கொடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் பணி நியமன உத்தரவு கிடைத்ததும் அந்தப் பெண்மணிக்கு நம்பவே முடியவில்லை.. அவருக்கு மட்டுமல்ல.. சுற்றியிருந்த அரசு அதிகாரிகளுக்கும் தான்..

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>