சூப்பரான காஸ்ட்யூமில் அட்டகாச எண்ட்ரி கொடுத்தார் ஆண்டவர். மழைக்காலத்தில் நாம் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி பேசியவர், அப்படியே யூ டர்ன் எடுத்து திரும்பவும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார். எதிர்கால தலைமுறையினருக்கு இந்த பூமியை மிச்சம் வைக்க வேண்டும் என்பது இன்று அவர் சொன்ன செய்தி.
வீட்டில் உள்ளோர் அனைவரும் பளபளவென்று தீபாவளி மோடில் தான் இருந்தனர். எடுத்தவுடன் எலும்பிச்சம்பழம் மேட்டர் தான் ஓடியது. உணவில் பார்ஷியாலிட்டி பார்க்கப்படுகிறதா என்ற கேள்விக்கு சுச்சி, சாம் இருவரும் பதில் சொன்னார்கள். நிஷா மற்றும் ரமேஷுக்கு மட்டும் கிடைத்ததாக அவர்கள் சொன்ன புகாருக்கு சரியான விளக்கம் கிடைத்துவிட்டது என்பதை பதிவு செய்தார்கள்.
உணவில் பார்ஷியாலிட்டு பற்றி பேசும் போதே உணவை கொட்டி வீணாக்கியதை உள்ளே நுழைத்து ஸ்கோர் செய்த ஆரியை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆரி அதை பற்றி பேசும் போது தலையில் அடித்து கொண்டார் சனம். ஆனாலும் "கொட்டினது நானா கூட இருக்கலாம்" என்ற பதிலை இன்று கமல் சார் முன்பும் மெயிண்டைன் செய்தார். ஆனாலும் உனக்கு ரொம்பத் தைரியம் சனம்.
"ஒரு சாரி சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்தை ஏன் இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துட்டு இருக்கீங்க" என்று கமல் சார் சொன்ன போது, "நான் சாரி சொல்லனுமா சார்" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சனம். இதற்கிடையில் ஹவுஸ்மேட்ஸ் உள்ளே செல்லும் போது கொடுக்கப்பட்ட செடிகளின் நிலை பற்றி கேட்டார். ஆரி, சனம் மேட்டர் முடிவில்லாமல் போய் கொண்டிருந்ததால், அந்த செடிகளை உள்ளே எடுத்து வரச் சொன்னார்.
செடிகள் உள்ளே எடுத்து வரப்பட்டு அதை பற்றி பேசப்பட்டது எல்லாமே, ரம்யா செய்த நல்ல செயல்களை வெளிக் கொண்டு வருவதற்கு தான் என்று தோன்றியது. ஆரி, அனிதா, ஆஜித், கேப்பி நால்வருக்கும் தங்களது செடிகள் எதுவென்றே தெரியவில்லை. 'நான் வெளிய செஞ்சுட்டு இருந்த விஷயம் தான் சார், அதனால இங்க இருக்கறவங்க செய்யட்டும்னு விட்டுட்டேன்" என்று ஆரி தற்பெருமை பேசிக் கொண்டார்.
ரம்யா தான் அந்த செடிகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். அதற்கு பரிசாக இன்னும் சில தொட்டிகளும் விதைகளும் உள்ளே அனுப்ப்படும் என்று கமல் சார் பாராட்டினார்.
இடைவேளைக்கு பின் லக்சரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய அலசல். யாரும் சொல்வதற்கு முன்னால் பாலா முன்வந்து தனது தவறைச் சொல்லி மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் கமல் சார் விடுவதாக இல்லை. பாதிக்கப்பட்டவங்க கிட்ட கேப்போம் என்று லைட்டை திருப்பினார். மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தது. கேரக்டரில் இருந்ததற்காக அர்ச்சனாவுக்கு பாராட்டு கிடைத்தது.
அடுத்ததாக ஹானஸ்ட், ஹானஸ்டி பிரச்சினை. கேப்பி விளக்கம் கொடுக்க, அதற்கு பாலா விளக்கம் கொடுக்க,..... பாலா வெளியே சென்று வந்த பிறகு தான் பிரச்சினை ஆனது, வெளியே என்னனடந்ததுனு எனக்கு தெரியாது என்று கேப்பி சொல்ல, "எனக்கு தெரியுமே" என்று தோள்களை குலுக்கினார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வெடித்து சிரித்தனர். பாலா, ஷிவானி, சுச்சியை தவிர. சம்பந்தபட்டவர்கள் இதை சொல்லட்டும் என்று விட்டு விட்டார். இதற்கு சுச்சி சொன்ன விளக்கம் தான் சுத்தமாக புரியவில்லை. ஹானஸ்டி விஷயத்தில் பாலா டீமிற்கு ஒரு கொட்டு வைத்தார்.
ஆரியின் கேப்டன்சி பற்றிய பீட்பேக் கேட்டறிந்தார். இதை பற்றி அதிகம் பேசியது அனிதாவும், சனம் மட்டும் தான். சென்ற வாரம் கோவக்காரனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஆரி இந்த வாரம், தனது இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தினார். முடிந்தளவு பொறுமையாக இருந்தார். அனிதா, சனம் இருவரை தவிர வேறு யாரிடமும் சண்டை நடக்கவில்லை. இந்த விஷயத்தை தான் சாம் சுட்டிக் காட்டினார். மூவரும் ஒரு அணியாக, ஒத்த கருத்துடன் இருந்த போதும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது, வேடிக்கையாக இருந்தது என்று குறிப்பிட்டார். ஆரி, அனிதா, சனம் மூவரையும் குறிப்பிடும் வகையில் TRIO என்று குறிப்பிட்டார் சாம். இந்த வார்த்தை வரும் வாரத்தில் பிரச்சினையாக மாறும்.
இதை உடனடியாக மறுத்த அனிதா, ஒரே மணியாக இருந்தாலும் எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதாக தெரிவித்தார். சனமும் இதை மறுத்தார்.
ஆரி கேப்டன்சி பற்றி பேசும் போது சனம் சில விஷயங்களை சொன்னார். மற்ற அணிகளிடம் வேலையை சொல்வதற்கு ஆரி தயங்கினார் என்று அதற்கு வெசல் வாஷிங் டீமை அழைக்கவில்லை என்று உதாரணம் சொன்னார். ஆரி அதை மறுத்தார். ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் ஆரி-சனம் இடையே ஒரு வாக்குவாதம் நடந்தது நினைவிருக்கலாம். ரெண்டு தட்டுக்கள் மட்டும் இருந்த போது அதை சனம் கழுவி வைத்தார். அதை ஆரி கண்டித்தது அதன் தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது. ஆனால் கமல் சார் முன்பு இருவரும் மாற்றிப் பேசினார்கள்.
அந்த உதாரணத்தோடு சனம் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதன் பிறகும் ஆரியின் கேப்டன்சி பற்றி தன்னுடைய கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், சுச்சி-ரமேஷ் இடையே நடந்த விஷயத்தை இழுத்து விட்டார். உண்மையில் சனத்திற்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லை. சுச்சி மற்றும் ரமேஷ் இருவருக்கும் நடுவில் இதுபோன்ற ஒரு பிரச்சனை நடந்தது யாருக்குமே தெரியாது. அப்படியிருக்கும் நிலையில் சனம் இந்த பிரச்சனை குறித்து பேசியது தேவையில்லாத ஆணி.
அதாவது பாத்ரூம் சுத்தம் செய்வது பற்றி ரமேஷ் மற்றும் சுச்சி இடையே சிறிய கருத்து வேறுபாடு வந்து இருக்கிறது. அதை அவர்களே பேசி சரி செய்து விட்டார்கள் பாத்ரூம் சுத்தமாக இல்லை என்று எந்த ஹவுஸ்மேட்சும் புகார் அளிக்கவில்லை அப்படியிருக்கும்போது ஆரி இதில் தலையிட வில்லை என்று சனம் சொல்லும் குற்றச்சாட்டு வலுவற்றது இதற்கு பதில் அளித்த சுச்சி ஆரியின் கேப்டன்சியை வெகுவாக பாராட்டினார் . இந்த வாரம் கிச்சனில் அதிகமாக இருந்தது சனம் மட்டுமே அனிதாவை அவ்வளவாக பார்க்கவில்லை என்று சாம் ஒரு குற்றச்சாட்டு சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த சனம் அனிதாவின் செயலை நியாயப்படுத்திப் பேசினார். ஆனால் சுச்சியின் வாக்குமூலத்தின் படி, இந்த வாரம் முழுவதும் ஆரி கிச்சனில் வேலை செய்திருக்கிறார். அதையும் சனம் ஒத்துக் கொள்கிறார். எனக்கு வலது கையை போல் ஆரி வேலை செய்ததாக சொல்கிறார். எனில் அனிதா பற்றிய சாம் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையாகிறது. சென்ற வாரத்தில் அர்ச்சனாவும் இதே குற்றச்சாட்டை அனிதா மீது சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்ச்சியில் பெரும்பகுதி நேரத்தை ஆரி சனம் அனிதா மூன்று பேர் மட்டுமே எடுத்துக் கொண்டனர். சம்யுக்தா கேப்டன் ஆன போது சோமீன் வாய்ப்பை பறித்துக்கொண்டார் என்று வாதிட்ட ஆரி, இன்று மற்ற ஹவுஸ்மேட்ஸின் நேரத்தையும் நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதை உணரவில்லை. இவர்கள் மூவரும் பேசிய விஷயங்கள் உப்புச்சப்பில்லாதவை. முக்கியமாக உணவு வீணானதை பற்றி பேசி, தன்னை ஒரு போராளியாக முன்னிறுத்தி ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதே ஆரியின் எண்ணம். அதற்காக தனது அணியை சேர்ந்த சனம்மின் மீது குற்றச்சாட்டு வைக்கவும் ஆரி தயங்கவில்லை. அதே போல தான் சனமும். ஆரியின் கேப்டன்சி மீது தான் வைத்த விமர்சனத்தை வலுவாக்கும் பொருட்டு, மற்ற விவகாரங்களை பொதுவில் உடைக்கவும் தயங்கவில்லை. அனிதா இன்னொமொரு படி மேலே சென்று, ஆரியின் கேப்டன்சி பற்றி நீண்ட விளக்கம் அளித்தார். அதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் எண்ணமே தெரிந்தது.
இவர்கள் மூவருக்குமே சனி, ஞாயிறுகளில் கமல் சார் முன்பு தங்களை எப்படியாவது முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது. அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவருமே, தங்கள் மீது ஒரு தவறு சுட்டிக்காட்டப்படும் போது விளக்கம் அளிக்கிறார்கள், அது ஏற்றுக்கொள்ளப்படாத போது மன்னிப்பு கேட்டு அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். ஆரி, சனம், அனிதா மூவரும் மட்டுமே தங்கள் மீது வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்வதில்லை. மாறாக தாங்கள் செய்தது சரி என்று மீண்டும் மீண்டும் வாதிடுகிறார்கள்.
இதை முடித்து அடுத்த டாபிக் செல்ல கமல் சார் முயற்சிக்க, அனிதா கை தூக்கினார். அவருக்கு பேச வாய்ப்பளித்தார் கமல் சார். சாம் சொன்ன trio வார்த்தைக்கு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் அனிதா. அவரை இடைமறித்த கமல் சார், நீங்கள் அளித்த விளக்கம் எனக்கு புரிந்து விட்டது, மேற்கொண்டு தேவைப்படுபவர்களுக்கு தனிபட்ட முறையில் சொல்லிக் கொள்ளுங்கள் என்று அனிதாவின் பேச்சை நிறுத்திவிட்டார். அப்போதும் பேச முயற்சி செய்து கொண்டே இருந்தார் அனிதா.
இடைவேளையில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும், ஒருபக்கமாக பேசுகிறார் என்றும் கமலின் மீதே குற்றச்சாட்டு வைத்து அதிர்ச்சியை கிளப்பினார் அனிதா....
சென்ற வார போரிங் பர்பாமராக சனம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்ற வாரம் யார் உங்களை நாமினேட் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு நிஷாவும், பாலாவும் படுத்தி எடுத்தார்கள். சாம் பதில் சொல்லும் போது மீண்டும் trio என்ற வார்த்தையை பயன்படுத்தினார். Trioவா இல்லை ரியோவா என்று டைமிங்கில் அசத்தினார் கமல் சார்.
அடுத்த வாரம் கண்டிப்பாக எவிக்சன் இருக்கிறது என்று சொல்லி விடைபெற்றார் கமல் சார். இந்த வாரம் பிரச்சினைகள் வெடிக்க சில திரிகள் கிள்ளப்பட்டு தயாராக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.