அன்பு ஜெயிக்கும்னு நம்பறீங்களா நீங்க ?? ஆண்டவரின் காரசாரமான கேள்விகள்.. நேற்று பிக் பாஸில் நிகழ்ந்தது என்ன??

Advertisement

மய்யம் கொண்ட புயல் கரையை கடந்தது, "மீன்" ஆட்சி புரியும் வீடுகள் தன்னோட ஸ்டைல்ல புயல பத்தியும், அதோட விளைவுகள் பத்தியும் பேசிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனார் ஆண்டவர். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.

54ம் நாள் நிகழ்வு.

ஆரியுடன் பேசிக்கொண்டிருந்தார் ரமேஷ்.தப்பு தப்பு ஆரி பேசறதை கேட்டுகிட்டு இருந்தார்னு தான் சொல்லனும். கருத்து இருந்தா தானே பேசனும்னு கமல் சார் முன்னாடி சொல்றாரு. ஆனா வாயை திறந்து ஒரு கருத்து கூட சுயமா சொல்ல மாட்டேங்கறாரு.

ஆரி பேசினது ரம்யாவை பத்தி. கால் செண்டர் டாஸ்க்ல எனக்கு யாரை வேணா கொடுங்க, நான் கேள்வி கேக்கறேன். எனக்கு யார் மேலயும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. (இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது ஆரி அவர்களே). அப்படினு குழு மீட்டிங்ல ஆரி சொல்லிருக்காரு. (அர்ச்சனாவோட ஸ்டேட்மெண்ட் படி பாலாவை தான் கேட்ருக்காரு ஆரி). ரமேஷ தேர்ந்தெடுத்த ரம்யா அவர்கிட்ட கேக்கறதுக்கு கேள்விகள் இல்லேன்னு புலம்பிட்டு இருந்ததா சொல்றாரு ஆரி. அப்ப ரமேஷை வேணா எங்கிட்ட கொடுங்க நீங்க ஷிவானியை எடுத்துக்கோங்கனு சொல்லும்போது ரம்யா அதை மறுத்துட்டாங்க.

ரம்யா உண்மையிலேயே வலிமையான போட்டியாளர்னா ஷிவானியை தேர்ந்தெடுத்துருக்கனும். கூட நட்பா பழகின ஷிவானி கிட்ட கேள்விகள் கேட்க முடியாம, அவங்க குறைகளை எடுத்துச் சொல்ல முடியாத ரம்யா எப்படி வலிமையான போட்டியாளரா இருக்க முடியும். இது தான் ஆரியோட லாஜிக்.

இந்த விஷயத்துல ரம்யா - ஆரி பேசினது நமக்கு காண்பிக்கப்படலை. சோ முழுமையான உரையாடல் நமக்கு தெரியாது. ஆரி சொல்றது ஹைப்போதெட்டிகலான விஷயம். ஒருவேளை ஆரி சொன்ன விஷயத்துக்கு ஒத்துகிட்டு இருந்தாலுமே இதே மாதிரி குற்றச்சாட்டு சொல்ல முடியும். ரமேஷ் கிட்ட கேள்வி கேக்க பயந்துகிட்டு தன்னோட தோழியை தேர்ந்தெடுத்து சேஃப் கேம் விளையாடறாங்க. இவங்க எப்படி வலிமையான போட்டியாளரா ஆக முடியும்னு சீசன் முடியற வரைக்கும் சொல்லி குத்தி கிழிச்சுருப்பாரு இதே ஆரி. சோ இந்த விஷயத்துல ஆரி பேசினது நியாயமே இல்லை.

ஆஜித் கிட்ட ரியோ கேள்வி கேக்கும் போது உள்ள உக்காந்துட்டு பொங்கறாங்கனு சொன்னாரு. இதெல்லாம் பாலாவை கேக்க வேண்டிய கேள்விகள்னு சொன்னது அவங்களோட ஒபீனியன். அதுவும் அந்த இடத்துல ரம்யா சொன்னது ஆஜித்துக்காக தான்னு பார்க்கற எல்லாருக்கும் தெரியும். ஆரி அதையே மாத்தி பாலாவுக்காக பேசினதா சொல்றாரு. ரம்யா கேக்க வேண்டிய கேள்வி எல்லாம் பாலா மூலமா வெளிய வரும்னு ஒரு ஸ்டேட்மெண்ட். ரம்யாவும் பாலாவோட குரூப்ல இருக்காங்க, அவங்க தனித்தன்மை எதுவும் இல்லை. குரூப்பிசம் செய்யறாங்கனு நிரூபிக்க முயற்சி செய்யறாரு ஆரி.

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா சாம் வெளிய போனா, ஆரியோட அடுத்த டார்கெட் ரம்யாவா இருக்கக்கூடும். அதுக்கேத்தா மாதிரி ரம்யா இந்த வாரம் கேப்டன் பதவிக்கு நிக்கறாங்க. வெயிட் பண்ணி பார்ப்போம்.

அடுத்த காட்சில சாம், ஷிவானி பேசிக்கறாங்க. எவிக்‌ஷன் டே வரதால அவங்களுக்கு ஒரு பயம் இருக்கு. சனம், அனிதா, ஆரி மூணு பேருமே சேர்ந்து டார்கெட் செய்யப்பட்டதா நம்பறாங்க அவங்க தான் எவிக்ட் ஆனது செய்தி வருது.

நைட் 11 மணிக்கு மீந்டும் ரியோவுக்கு ஒரு பஞ்சாயத்து. ஹவுஸ்கீப்பிங் வேலையை செய்ய கேப்பி வாலண்டியரா வராங்க. வேலை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அங்க வந்த அனிதா, எங்கிட்ட முன்னாடியே ஏன் சொல்லலைனு கேக்கறாங்க. இந்த வீட்டோட கேப்டன்ங்கற முறையில என்னோட டெசிஷன்னு சொல்லிருக்கனும். அதை விட்டுட்டு சாரி, சாரினு பேசிட்டு இருக்காரு ரியோ. என்னவோ போங்க.

ஆண்டவர் விசாரணை

பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையா ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் 12 மணி நேரம் வெளிய தங்கிருக்காங்க. அந்த எக்ஸ்பீரியன்ஸ் பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டாரு.

எவிஷன் டாப்பிள் கார்ட் பத்தி தான் முதல் கேஸ். அனிதாவுக்கு பாராட்டு கிடைச்சுது. இனி என்னல்லாம் நடக்கப் போகுதோ.... நிஷா உணர்ச்சிவசபட்டதா சொன்னாரு.

இந்த டாஸ்க் கொடுத்தாலும் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் நடந்துருக்கு. அந்த அழுத்தம் தான் நிஷாவை உணர்ச்சிவசப்பட வச்சுருக்கு. வெற்றி கிடைச்சும் அவங்க வெளியேறினதுக்கு காரணம் அது தான். முதல் ரவுண்ட்ல வெளிய வந்த பாலா, ஆரிக்கு பாராட்டு கிடைச்சுது. அதுக்கப்புறம் மாத்தி மாத்தி குற்றச்சாட்டு வச்சுகிட்டாங்க. நேரத்தை பத்தி பேசின ரமேஷ்க்கு ஒரு குட்டு விழுந்தது.

எவிக்‌ஷன் டாப்பிள் கார்டு ரொம்ப முக்கியமான வாய்ப்பு, அப்படியிருக்கும் போது நேரத்தை காரணம் காட்டக்கூடாதுனு சனம் சொன்ன கருத்துக்கு பாராட்டு கிடைச்சது. அதே மாதிரி நிஷா தன் மேல வச்ச குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னாங்க. டாஸ்க்ல பேசினதை காரணமா வச்சு வொர்ஸ்ட் பர்பாமருக்கு நாமினேட் செய்சதை சொன்னாங்க. ஏம்மா அது உங்களுக்கு பொருந்தாதா? டாஸ்க்ல சொன்ன ஒரு விஷயத்துக்கு ரியோவை வறுத்தெடுத்தீங்களே.

நிஷாவையும், ரியோவையும் கொஞ்சம் விலகி இருங்கனு சொன்னது அவங்களுக்கு புரிஞ்சுதானு தெரியல.

இந்த வீட்ல யாருக்கு வாய்ப்பு கிடைச்சாலும் அடுத்தவங்களை காலி பண்ணி தான் ஸ்கோர் செய்யனும்னு தான் பேரும்பாலான ஹவுஸ்மேட்ஸோட எண்ணம். சனம்க்கு கிடைச்ச வாய்ப்புல தன்னை நியாயமில்லாத காரணத்தை சொல்லி நாமினேட் செஞ்சதை சொன்னாங்க. அதே மாதிரி தான் ஆரியும் செஞ்சாரு. வொர்ஸ்ட் பர்பாமருக்கு தன் பேரை சொன்னதுக்கு நிஷாவை வறுத்தெடுத்துட்டாரு ஆரி.

சகோதரிக்கு பேச வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தேன். சோம், ரமேஷ் பேச வந்த போது கூட அவங்களை தடுத்து நிறுத்தி சகோதரியை பேச சொன்னேன். அப்படியிருக்கும் போது என் பேரை சொல்லிட்டாங்கனு ஒரு நீண்ட உரை ஆற்றினார். என்னைவிட வொர்ஸ்ட் பர்பாமரை ஏன் உங்க கண்ணுக்கு தெரியலனு கேட்டதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல முடியும். ஆரி வொர்ஸ்ட் பர்பாமர்ங்கறது நிஷாவோட ஒபீனியன். அதுக்கு அவங்க சொன்ன காரணம் தவறுனு வாதாட ஆரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா என் பேரை ஏன் சொன்னனு கேக்கக்கூடாது.

இந்த சீசன்ல இருக்கற முக்கியமான பிரச்சினை யாருமே பழசை மறக்க தயாரா இல்லை. ஒத்த வார்த்தையை பிடிச்சுட்டு தொங்கறாங்க. சொன்ன வார்த்தை உள்நோக்கத்தோடு சொல்லபட்டதானு கூட பார்க்கதில்லை. எந்த வார்த்தை சொன்னாலும் அதுக்கு ஒரு அர்த்தம் கொடுத்து அடுத்தவங்களை வாட்டி வதைக்கிறாங்க.இந்த சீசன் விளையாடற எல்லாருமே ஸ்ட்ராட்டஜியா தான் விளையாடறாங்க. பாலா அதை வெளிப்படையா ஒத்துக்கறான். மூத்த யாரும் அதை பத்தி மூச்சு விடறதில்லை. எப்பவோ பேசப்பட்ட வார்த்தை, நடந்த சம்பவத்தை முடிஞ்ச வரைக்கும் இழுத்து இழுத்து பேசி பார்க்கற நமக்கே கடுப்பு தான் வருது.

ஒவ்வொரு வாரமும் கமல் சார் எபிசோட்ல கூட அது தான் நடக்குது.டீச்சர் டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டாங்கற மாதிரி தான் எல்லா புகார்களும்.

மற்றவர்களை முன்னிறுத்தி விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு அர்ச்சனா பதில் சொல்றாங்க. குரூப்பிசம் பத்தின பாலாவோட குற்றச்சாட்டுக்கு கேப்பி எடுத்து வச்ச பாயிண்ட் வேலிட் ஆனது. ஆனா பாலாவோட குற்றச்சாட்டுக்கு நேரடியான ஆதாரங்கள் கொடுக்க முடியாதும் அதை நிரூபிக்கவும் முடியாது.

இது குழு விளையாட்டில்லை. எல்லாரும் தங்களோட தனித்திறமையை காட்டி விளையாடுங்கனு அட்வைஸ் மட்டுமே கொடுத்தார் கமல் சார்.

அடுத்ததா சொல்வதை செய்ய வேண்டும் என்று பாலா சொன்ன வாக்கிய பஞ்சாயத்து. ஆரி நாமினேட் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து அவர் கூட சண்டை போட்டு மன்னிப்பு கேட்டது வரைக்கும் சொல்லி முடிச்சாரு பாலா. அதுக்கு விளக்கம் கொடுக்க ஆரி தன்னோட வெர்சனை சொல்ல வந்த போது நமக்கே கொட்டாவி வந்தது. நல்லவேளையா தடுத்து நிறித்திட்டாரு.

விட்டுக்கொடுத்தீங்களானு கேட்டதுக்கு ஆமானு சொல்லி அவர் கொடுத்த விளக்கம் ஏற்கனவே அவர் கொடுத்த ஸ்டேட்மெண்டுக்கு முற்றிலும் மாறானது. முதல்ல அவர் கொடுத்த விளக்கத்தை அவர் சபைல சொன்னா அது பாலாவோட வாதத்துக்கு வலு சேர்க்கும். கூடவே அர்ச்சனா குரூப்போட டார்கெட்டா மாற வாய்ப்பிருக்கு. சோ இப்ப வேற ரீசன். மாத்தி மாத்தி பேசறாருனு பாலா சொன்ன ஸ்டேட்மெண்ட் உண்மையாகிடுச்சு.

தனக்கே கன்விக்‌ஷன் இல்லாத ஒரு விஷயத்தை சொல்லும் போது ஆரி ரொம்பவே தடுமாறாரு. நேத்து அவர் சொன்ன விளக்கமும் அதே மாதிரி தான். போட்டியின் போது ரியோ தவறு செய்ததாகவும், அதனால டென்ஷனாகி விட்டதாகவும் சொன்னாரு. ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போட விளையாடுங்கனு டிப் கொடுத்தாரு கமல் சார்.

ஆரி விட்டுக் கொடுத்ததா சொன்ன போதும் சரி, அதுக்காம விளக்கம் கொடுத்த போதும் சரி. ரியோ பேசவே முயற்சி செய்யலை. கமல் சாரும் ரியோவோட கருத்தை கேக்கவே இல்லை. இதே தான் ஆரி-சாம் விஷயத்துல நடந்தது. பாலா விடுக் கொடுத்ததை பத்தி இப்ப வரைக்கும் சோம் கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கலை. இதெல்லாம் வச்சு பார்க்கும் போது இந்த பிரச்சினை இன்னும் பல வாரம் ஓடும் போல.

பாலாவும், ஆரியும் சேவ் ஆனது சொல்லி விடை பெற்றார். இன்னிக்காவது ஏதாவது சுவாரஸ்யம் இருக்கானு பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>