வாடிவாசலில் சூர்யா நடிக்கவில்லையா? ரசிகர்கள் ஷாக்..

by Chandru, Nov 29, 2020, 12:13 PM IST

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தனர். டைரக்டர் ஹரி உள்ளிட்ட சிலரும் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி சூரரைப் போற்று படம் ஒடிடியில் வெளியானது.
இப்படத்தை அடுத்து சூர்யா 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார்.

கவுதம் மேனனுடன் சூர்யா ஏற்கனவே காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் நடித்திடிருக்கிறார் புதிய படம் மூலம் 3வதுமுறையாக இருவரும் இணைகின்றனர். இந்நிலையில் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிக்க வில்லை என்று நெட்டில் தகவல் பரவியது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் தகவலை கேள்விப்பட்டு பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் ஷாக் ஆனார். உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில் டிவிட்டர்.காம்/திவிகிரியேஷன்ஸ் இந்த டிவிட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல. என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள்.

வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். வாடிவாசல் வெற்றிமாறன் இயக்குகிறார். இது ஜல்லி கட்டு பின்னணியிலான கதை இதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு மாடு பிடிக்கும் பயிற்சி பெறுகிறார். இப்படத்தில் தந்தை மகன் என் இரட்டை வேடத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது. சூர்யா, வெற்றிமாறன் முதன்முறையாக இணையும் படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை