தனுஷை தலைவா என்று அழைத்த பாலிவுட் நடிகை..

by Chandru, Nov 29, 2020, 12:14 PM IST

தமிழில் டாப் ஹீரோக்கள் விஜய். அஜீத் போன்றவர்கள் முழுக்க தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் தனுஷ் வித்தியாசமாக இந்தி படங்கள், ஆங்கில படம் என கலக்கிகொண்டிருக்கிறார். வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடித்தமுடித்த தனுஷ் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் இந்தியில் உருவாகும் அட்ராங்கிரே படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அனந்த் எல் ராய் இயக்குகிறார். ஏற்கனவே இவர் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் தனுஷ் இந்தி படத்தில் அறிமுகமானார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் வீட்டிலிருந்தார் தனுஷ். ஊரடங்கு தளர்வில் ஷூட்டிங் தொடங்கியதும் மதுரையில் நடந்த அட்ராங்கிரே படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்றார். இதன் படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. மதுரை படப்பிடிப்பில் தனுஷுடன் இந்தி நடிகை சாரா அலிகானும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இருவரும் ஜிம்மில் ஒர்கவுட் செய்வதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. தனுஷ், சாரா இருவரும் அருகருகே படுத்தபடி உடற்பயிற்சி செய்தனர்.

இந்த புகைப்படத்தை சாரா அலிகான் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு தலைவா உடன் நான் என கமெண்ட் பகிர்ந்ததுடன் அந்த படத்துக்கு ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ்.. பாடலை பின்னணியில் சேர்த்திருக்கிறார். அட்ராங்கிரே 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் ஷெட்யூல் முடிக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஹிமான்சு சர்மா கதை எழுதி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்