வளர்ப்பு பற்றின குறும்படம்.. சம்யுக்தா வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

Advertisement

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார். ஆனா கடைசி வரைக்கும் இது யாருக்குனே தெரியாம போச்சு. கெட்டவனுக்கு நல்லவன் கெட்டவன், நல்லவனுக்கு கெட்டவன் நல்லவன்... இதை சொல்லிட்டு புரிஞ்சுதானா வேற கேட்டாரு. இன்னிக்கு குழப்பனும்னே வந்துருக்கீங்கனு நல்லா புரியுது ஆண்டவரே.

கால் செண்டர் டாஸ்க்ல சோம்-கேப்பி உரையாடல் நல்லாருந்ததா பாராட்டினார். ரம்யா-ரமேஷ் இருவருக்குமே பாராட்டு கிடைச்சுது. சனம்-சாம் உரையாடல் பத்தின பேச்சு வந்த போது, கேள்விக்கு பதில் சொன்னாலும் திருப்தி இல்லைனு சனம் சொன்னாங்க. "கலீஜ்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி, அது போன்ற வார்த்தைகள் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தனிப்பட்ட உரையாடலை எடுத்து பொதுவுல போட்டு உடைச்சு பிரச்சினை பண்றதை சனம் வழக்கமாவே வச்சுருக்காங்க. "முட்டாள் மாதிரி பேசாதே" னு நாம பேச்சு வாக்குல சொல்லுவோம். அதை எடுத்துட்டு போய் "அவன் என்னை முட்டாள்னு சொல்லிட்டான்" னு பொதுவுல குற்றம் சொல்ல முடியும். முட்டாள் என்று ஒருவரை திட்டுவதும் தவறு தான். ஆனா நாம பேசும் போது அப்படியான அர்த்தத்தில் சொல்லிருக்க மாட்டோம். பேச்சு வாக்குல சொல்ற வார்த்தைகளை எடுத்து சண்டை போட ஆரம்பிச்சா, அதுக்கு முடிவே இல்லை.

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் சனம், சம்யுக்தா ரெண்டு பேருக்குமே மொழிப் பிரச்சினை இருக்கு. சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பின்னாடி தான் கேட்டு தெரிஞ்சுக்கறாங்க சனம். அந்த வார்த்தைக்கான அர்த்தம் தனியா சொல்லும்போது , அது வேற மாதிரி இருக்கு. உடனே என்னை பார்த்து அப்படி சொல்லிட்டாங்கனு பிரச்சினை வந்துருது. தறுதலை வார்த்தையும் அப்படித்தான் வந்தது. அடிமைகள் டாஸ்க்ல இதே பிரச்சினை வந்தது.

வேற ஒரு இடத்துல, வேற ஒரு காண்டக்ஸ்ட்ல சொல்லப்பட்ட ஒரு வார்த்தை, தனியா அர்த்தம் எடுத்து பார்க்கக் கூடாது. இங்க சனம் பார்க்கவேண்டியது, அந்த வார்த்தையை பயன்படுத்தினவங்க உள்நோக்கத்தோட பயன்படுத்தினாங்களானு பார்க்கனும். அதை இங்க யாருமே பார்க்கறதில்லை. போன் பேசும் போது ரியோ சொன்னதும் அந்த மாதிரி தான். அவரோட நோக்கம் சனம்-அனிதாவோட ப்ரெண்ட்ஷிப்பை பாராட்டுவது தான். ஆனா அதை புரிஞ்சுக்காம "நீ எப்படி அப்படி சொல்லலாம்னு" சண்டைக்கு போறதை தான் சனம் இங்க தொடர்ந்து செய்யறாங்க. இதை யாராவது எடுத்து சொன்னா பரவால்ல. மத்தபடி அப்படியான வார்த்தைகளை எடுத்து சண்டை போட்டு மைலேஜ் ஏத்திக்கறது தான் ஸ்ட்ராட்டஜினா, அதுக்கு நாம எதுவும் சொல்ல முடியாது.

"வளர்ப்பு" பத்தி சம்யுக்தா சொன்னது விவாவதத்துக்கு வந்தது. அதுக்கு முன்னாடி சம்யுக்தாவை பத்தி பேசும் போது அவரோட தாய்மையை இழிவு படுத்தி பேசினதா ஆரி மேல ஒரு குற்றச்சாட்டு வச்சுருந்தாங்க. அதுக்கு விளக்கம் கொடுக்கபட்டது. ஆரி பேசின அந்த க்ளிப் மட்டும் ஒளிபரபப்பட்டது. ஆனா அதுக்கு முன்னாடியே "ஆரி அப்படி எதுவும் பேசலைனு"கமல் சார் தன்னோட தீர்ப்பை சொல்லிட்டாரு. ,அந்த காட்சி ஒளிபரப்பாவதற்கு முன்னாடி அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை இங்க கோடிட்டு காட்ட விரும்புகிறேன். " இன்னொரு உயிரை காப்பாற்றும் பொறுப்பும், உணர்வும், அனுபவமும் உள்ள உங்களுக்கு ஏன் இந்த அளவு மெச்சூரிட்டி இல்லை, என்பது தான்". இது கமல் சார் சொன்ன வார்த்தைகள். இதுக்கும் யாராவது பொழிப்புரை சொன்னால் நன்று.

சம்யுக்தாவோட மெச்சூரிட்டி பத்தி தான் சொல்ல வந்தேன் என்பது ஆரியோட வாதம். 3 வாரத்துக்கு முன்னாடி நடந்த மிகப்பெரிய வாக்குவாதத்துல, கோபத்துல சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை எடுத்து, அதுக்கு ஒரு அர்த்தம் கொடுத்து, விளக்கி சொல்ல இப்படி ஒரு உதாரணத்தை பயன்படுத்திருக்காரு ஆரி. ஆக்சுவலா இதை உதாரணம்னு சொல்ல முடியுமானு தெரியலை.

ரெண்டு பேரை நீங்க ஒப்பீடு செய்யும் போது ஒருத்தரை தாழ்த்தியும், ஒருவரை உயர்த்தியும் தான் சொல்ல முடியும். ஆனா இங்க இருவரையும் உயர்த்தி சொன்னதா சொல்றாரு ஆரி. உயர்த்தி சொல்வதற்கு எதற்கு ஒப்பீடு என்பது தான் இங்க கேள்வி. இலக்கணம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கனும்.

ஆரி பேசினதை ஏன் டிவில ஒளிபரப்பலைங்கறது முக்கியமான கேள்வி. ஆரி பேசின அன்னிக்கே சாம் இதை குறிப்பிட்டு பேசி அழறாங்க. ஆனா சாம் -அர்ச்சனா கான்வோ மட்டும் தான் அன்சீன்ல காமிக்கறாங்க. அடுத்த நாள் ஒளிபரப்பின் போது, முந்தின நாள் நடந்த விஷயங்களை க்ளிப்பிங்ஸா போடுவாங்க. அப்படித்தான் ஆரி பேசினது காட்டப்பட்டது. சாம் இதை ஒரு குற்றச்சாட்டா வச்சதுக்கு அப்புறமும் எடிட்டிங்கல, ஆரி பேசினது மட்டும் கட் ஆகிருக்கு.

எந்த ஒரு விஷயமும் நடக்கும் போது பார்த்தால் அதோட இம்பாக்ட் வேற இங்க அன்சீன்ஸ் பார்க்காதவங்க தான் அதிகம். அப்படி இருக்கும் போது ஆரி-சாம் இருவரும் பரஸ்பரம் வைத்த குற்றச்சாட்டுக்கு, சாம் பக்கம் எந்த ஆதாரமும் இல்லாம போய்டுது. சாம் சொன்னதை யாரும் பெருசா எடுத்துக்கவே இல்லை. இந்த சீசன்ல இந்த மாதிரி நிறைய முக்கியமான விஷயங்கள் காட்டப்படுவதே இல்லை. "You are unfit to the house" அப்படினு நிஷாவை பார்த்து ஆரி சொன்னதும் டிவில வரலை. ஆனா அதுக்கப்புறம் நிஷா மத்தவங்க கிட்ட பேசி வருத்தப்படறது மட்டும் காட்டப்படுது.

நிஷாவை திட்டினது காட்டப்பட்டுருந்தா அது ஆரி மேல கோபமாகவும், நிஷா மேல பரிதாப உணர்ச்சியும் ஆடியன்ஸ்க்கு வந்துருக்கும். இது போன்ற விஷயங்களும் ஆட்டத்தை மாற்றவல்லது. இந்த சீசன்ல விளையாடற எல்லாருக்கும் அபிமானிகள் இருப்பாங்க. அதே மாதிரி வெறுப்பாளர்ளும் இருப்பாங்க. ஆரியோட வெறுப்பாளார்கள் நிஷாவுக்கு ஓட்டு போடுவதும், சம்யுக்தா, பாலா வெறுப்பாளர்கள் ஆரிக்கு ஒட்டு போடுவதும் தான் வோட்டிங்ல நடக்கும். அப்படியான ஓட்டுகள் தான் ஆட்டத்தை மாற்றும். சில சம்பவங்கள் மட்டும் மறைக்கப்படும் போது இந்த சமநிலை பாதிக்கப்படுகிறது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.

அதுவும் இந்த சீசன்ல ஒத்த வார்த்தைக்கு பல மணி நேர சண்டை போடும் போது, நேரடியான ஒரு ஸ்டேட்மெண்ட் காட்டப்படாம போனது தவறு.

இதற்கு சரியான உதாரணம் ஒன்று காட்ட வேண்டுமென்றால் பாலா-சனம்-தறுதலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

சம்பவத்திற்கு முன் தினம் இரவு பாலாவும், சனமும் பேசிக் கொள்கிறார்கள்.
பாலாவின் பின்புறத்தில் செல்லமாக உதைக்கிறார் சனம்.
மறுநாள காலை டாஸ்க் நடக்கும் போது அவர்களுக்கு இடையேயான உரையாடல்.
அதற்கு பிறகு தறுதலை என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் சனம்.
அதன் பிறகு தான் சண்டை நடக்கிறது.

இத்தனைக்கு பிறகு சண்டை நடக்கும் போது நம்மால் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. பாலாவின், வாதம், சனமின் வாதம் இரண்டுக்குமே சாட்சியாக நாம் பார்த்த காட்சிகள் இருக்கிறது. நான் எப்போதும் சொல்வதைப் போல் ஒரு பிரச்சினை நடக்கிறது என்றால், அதற்கு முன்னால் நடந்த சம்பவங்கள், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இரண்டையுமே வைத்து தான் ஸ்டாண்ட் எடுக்க வேண்டும்.

சனம் பெட்ரூமுக்குள்ள இருக்கும் போது பாலா வந்து தறுதலைனு 3 தடவை கத்திட்டு உள்ள வருவாரு. அந்த காட்சி கொடுத்த இம்பாக்ட் தான் சனம்க்கு கிடைத்த ஆதரவு. அதுவே அந்த காட்சி நமக்கு காட்டப்படாம, சனம் அதை விவரிக்கறா மாதிரி காட்டிருந்தா நாம இதே உணர்ச்சிகளை காட்டிருப்போமா? அது தான் நிஷாவுக்கு நடந்தது.

இது போன்ற சம்பவங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவை. அந்த தறுதலை பிரச்சினையை ஆரி யூஸ் பண்றாரு, சனம்க்கு சிம்பதி கிடைக்குது, ஆரி, சனம் நட்பு உருவாகுது. இப்படி சங்கிலி தொடரான நிகழ்வுகள் நிறைய நடந்தது. நேத்து கமல் சார் சொன்னதும் இதான். அனிதா டாப்பிள் கார்ட் வாங்கலேன்னா ஆட்டமே மாறிருக்கும். இந்த சம்பவங்களை மக்களுக்கு காட்சிபடுத்தாத விஜய் டிவிக்கு கண்டனங்கள்.

இந்த ரெண்டு சம்பவத்திலும் ஆரி சம்பந்தபட்டிருப்பது தற்செயலான் விஷயம்னு என்றே நம்புவோம்.

சோம், சனம், நிஷா மூவரும் சேவ் செய்யப்பட்டு சாம் மற்றும் ரமேஷ் மட்டும் இறுதில இருந்தாங்க. நிஷா சேவ் ஆனதுக்கு ஆனந்த கண்ணிர் விட்டாங்க அர்ச்சனா. கடைசியா சம்யுக்தா தான் எவிக்ட் ஆனது. ரொம்பவும் ஸ்ட்ராங்க பெண்ணா தன்னை காட்டிகிட்டாலும், சம்யுக்தா மனம் நெகிழ்ந்து அழுத தருணங்களும் உண்டு. அவர் பையனை நினைச்சு அழுதது தான் அதிகம். இந்த வீட்டுக்குள்ள நடந்த பிரச்சினைகளுக்காக அவர் கண்ணிர் விட்டது ரொம்பவே குறைவு. அதனால வெளியே போகும் போதும் அழாம தான் போனாங்க. உங்க எல்லாரையும் நான் மிஸ் பண்ணுவேன்னு சொன்ன போது தான் அவங்க கண்கலங்கினாங்க. பாலாஜியும் அழுதது எதிர்பார்க்காதது.

சாம் ரொம்பவும் புத்திசாலியான பெண். வாழ்க்கையில வெற்றிகளை பார்த்தவங்க தான். அதுக்காக அவங்களுக்கு எந்த பிரச்சினையுமே கிடையாதுனு அர்த்தம் இல்லை. தன்னோட வேதனைகளை, வலிகளை, தோல்விகளை மறைச்சுட்டு பாசிட்டிவ் சைட் மட்டும் நமக்கு காட்டினாங்கனு நினைக்கிறேன். அவங்களோட தன்னம்பிக்கையும், மன உறுதியும் நன்றாகவே வெளிப்பட்டதுனு தான் சொல்லனும். இந்த வீட்ல அவர் தொடர்ச்சியா டார்கெட் செய்யபட்ட போதும் சரி, அவருடைய தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டு கேரக்டரை அசிங்கபடுத்தின போது சரி, அவங்க அதுக்காக கலங்கவே இல்லை. முக்கியமா அழவே இல்லை. பொதுவாகவே பெண்கள் அழுதே காரியம் சாதித்துக் கொள்வார்கள்னு ஒரு பிம்பம் இருக்கு. அது இந்த தலைமுறை பெண்களுக்கு பொருந்தாது. நிஷா, அனிதா, அர்ச்சனா 3 பேரும் தொட்டதுக்கெல்லாம் கண்ணிர் விடும் போது அந்த வீட்ல ஸ்ட்ராங்கான பெண்களா இருக்கறது சம்யுக்தா, ரம்யா, ஷிவானி, சனம் தான்.

தன் மேல் வைக்கபட்ட குற்றச்சாட்டுகளை, தனக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்களை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கவே இல்லை. மிக முக்கியமாக கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அடுத்தவர்களிடம் சண்டைக்கு போகல. அதை வச்சு ஸ்கோர் செய்யனும், மைலேஜ் ஏத்தனும்னு அவங்க நினைச்சதே இல்லை.

ஆனா சம்யுக்தா மேல மேட்டிமைத்தனமா நடந்துக்கறதா குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதுக்கான ஆதாரமா வளர்ப்பு சரியில்லைனு அவங்க பேசின விஷயம் சொல்லப்பட்டது. வளர்ப்பு பத்தி அவங்க பேசினது "provoking" அடிப்படையில தான் வரும். "ஆம்பிளையா இருந்தா செய்டா" னு ஆரி பேசின போது அதுக்கு காரணம் பாலாவோட செய்கைகள் தான் provoking. இதை தான் கமல் சாரும் சொன்னாரு. ஒருத்தரை மாத்தி ஒருத்தர் ப்ரவோக் பண்ணிக்காதீங்கனு அவங்களுக்கு அட்வைஸ் கொடுத்தாரு.

சண்டை நடக்கும் போது, கோபம் வரும் போது எதிராளி தன்னை அவமானபடுத்திய போது கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் தான். இங்க பாலா, ரியோ ரெண்டு பேருமே கெட்ட வார்த்தைகள் பேசறாங்க. அப்படியான ஒரு எதிர்வினையாக தான் சம்யுக்தா பேசினதையும் நான் பார்க்கிறேன். ஆரி பேசியதற்கான எதிர்வினை தான் சாம் பேசினது. அவங்க பேசின வார்த்தை தவறுங்கறதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனா அது மேட்டிமைத்தனம் இல்லங்கறது தான் என்னோட வாதம்.

அவங்க அப்படி நடந்துக்கலைனு அந்த வீட்டுக்குள்ள இருந்தே உதாரணம் காட்ட முடியும். வேல்முருகன் கூட பேசவே இல்லைனு சொன்னாங்க. ஆனா அவரோட சேர்ந்து பேஷன் ஷோ டாஸ்க்ல பர்பார்ம் செஞ்சுருக்காங்க சம்யுக்தா. அது டாஸ்க்கா இருந்தாலும் முழு ஈடுபாட்டோட தான் பண்ணிருந்தாங்க. நிஷா கூட அவங்க விலகியே இருக்காங்கனு குற்றச்சாட்டு சொன்னதும் உண்மையில்லை. எவிக்‌ஷன் டாப்பிள் ப்ரீ டாஸ்க்ல நிஷா அழுதுட்டு இருந்த போது அவங்களை கூட்டிட்டு வந்தது சாம் தான். கமல் சார் முன்னாடி நிஷாவோட திறமையை சிலாகிச்சு பேசிட்டு தான் போனாங்க. இங்க வேல்முருகன், நிஷா உதாரணம் எதுக்குன்னா, அவங்க பேரை சொல்லித்தான் இந்த குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுது.

இவங்க இல்லாம ஆஜித்தோட அவங்களுக்கான உறவு. அம்மா இல்லாத குறையை சம்யுக்தாகிட்ட பார்க்கறதா ஆஜித் சொன்ன விஷயம் பொய்யா இருக்க முடியாது. ஆஜித்தோட கண்ணிரே அதுக்கு சாட்சி. அதுல கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த உறவை எங்கேயும் அவங்க காட்சிபடுத்தலை. உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி விஷயங்களை விஜய் டிவி எப்படி ப்ரமோட் செய்வாங்கன்னு. ஆனா அப்படி ஒரு விஷயமே இல்லாம இயல்பா இருந்தது கூட சம்யுக்தாவுக்கு மைனஸ் ஆகிருக்கலாம்.

எல்லாத்துக்கும் மேல போன வாரம் இந்த வீட்ல யார் இருக்கனும்ங்கற கேள்விக்கு சனம், அனிதா, ஆரியை தவிர மீதி 10 பேரும் சம்யுக்தா பேரை தான் சொன்னாங்க. அந்தளவு வீட்ல இருக்கறவங்களோட அன்பா இருந்திருக்காங்க. மேட்டிமைதனத்தோட இருக்காங்கறது உண்மையா இருந்தா அது வீட்ல உள்ளவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். அதனால அவங்க மேல வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது.

வெளியே வந்து கமல் சார் கிட்ட பேசும் போதும் பாசிட்டிவா பேசிட்டு போனாங்க. ஆனா அவங்க போகும் போது ஹவுஸ்மேட்ஸை பார்க்காம அனுப்பி வச்சுதுக்கான காரணம் என்னனு தான் தெரியல. ரம்யாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர் மூலம் தான் சம்யுக்தா வெளியே தெரிந்தார். ஆனால் அதுவே அவருக்கு வில்லனாகி போனது. இறுதியில் அனிதாவுக்கு கிடைத்த ஒரு ஸ்பெஷல் பவர் தான் அவருடைய வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.

மொத்தத்துல இந்த வாரம் கமல் சார் எபிசோட் ரொம்பவுமே ஏமாற்றமா இருந்தது. வழக்கமான அவரோட ஷார்ப் இல்லை. ஆரி விட்டுக்கொடுத்த பிரச்சினைல ரியோவோட கருத்தே கேக்கலை. காதல் கண்ணை மறைக்குதுனு பேசினவர், அன்பா, காதலானு ஆரி கேட்ட கேள்வியை பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கலை. என்ன பிரச்சினைனு தெரியலை. சில வார்த்தைகள் உச்சரிப்பும் ரொம்ப குழறலா இருந்தது.

விட்டுக்கொடுக்கும் விஷயத்துல தன்னோட கருத்தை பதிவு செய்யாத ரியோ பெரிய தப்பு செஞ்சுட்டதா தான் தோணுது. அவர் கை கூட தூக்கலை. இந்த பிரச்சினை பாலா எழுப்பினப்போ கூட, அதுக்கு சம்பந்தம் இல்லேனு சொன்னாரு ரியோ. அதே மாதிரி ரியோ கேப்டன்ஷிப் ரேட்டிங் போது சனம் பேசினது ரொம்பவே அதீதம். அன்னிக்கு நடந்த சாதாரண விஷயங்களை கூட குற்றச்சாட்டா சொல்றது தேவையே இல்லாதது. ஒரு கேப்டனா முடிவெடுத்தேன்னு ரியோ சொன்னது திமிர்ங்கறா மாதிரி சனம் சொன்ன போது வெறும் ரியாக்சன் மட்டும் கொடுத்துட்டு இருந்தார் ரியோ. கேப்டன்ங்கற அதிகாரத்தை பயன்படுத்துவது எப்படி திமிர் ஆகும். அதை அப்பவே கண்டிச்சு பேசிருக்கனும்.

இந்த வீட்டுக்குள்ள இருக்க ஒவ்வொருத்தரும் என்னவெல்லாமோ செய்யறாங்க. சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் அடுத்தவங்களை காலி செய்யனும்னு நினைக்கறாங்க. ஆனா ரியோவுக்கு வெளியே போகறதை பத்தின கவலை இல்லாததால எல்லாற்றையும் ரொம்ப ஈசியா எடுத்துக்கறாரு.

நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் ஆரியும், அர்ச்சனாவும் பேசிக்கறாங்க. சாம் பிரச்சினைக்கு. ஆரி எப்பவும் போல தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு இருந்ததா உங்களுக்கு தெரியும். ஆனா அவர் அதை செய்யலை. நாமினேஷன் நடக்கும் போது முதல் ஆளா வந்து பேசி மத்தவங்க மைண்ட் செட் பண்ணுவான்னு பாலா மேல ஒரு குற்றச்சாட்டு சொன்னாரு ஆரி. ஆக்சுவலா ஆரி தான் இப்ப மைண்ட் செட் பண்ணிட்டு இருக்காரு. அதாவது தன்னுடைய அடுத்த டார்கெட்டான ரம்யாவுக்கு எதிரான மனநிலையை மத்தவங்க மனசுல விதைக்கற வேலை. முந்தாநேத்து ரமேஷ் கிட்ட, நேத்திக்கு அர்ச்சனா கிட்ட.

ரம்யா ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட்னு எல்லாருமே சொல்லிருக்காங்க. அவங்க அப்படி இல்லைனு ப்ரூப் செய்யறது தான் ஆரியோட அடுத்த கட்ட பணி. இதை பத்தி அடுத்தடுத்த நாட்கள்ல விரிவா பார்ப்போம்.

இறுதியா இந்த வார கமல் சார் எபிசோட் ரெண்டுமே அட்டகாசம்னு சனம் சர்டிபிகேட் கொடுக்கறாங்க. எதையுமே லேட்டாவே புரிஞ்சுக்கற சனம்க்கு புரிஞ்ச விஷயம் எனக்கு புரியலைங்கற போது கஷ்டமா இருக்கு ப்ரெண்ட்ஸ்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>