முதல் முறையாக டபுள் எவிக்‌ஷன்.. ஜெயிலுக்கு சென்ற நிஷா.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது

Advertisement

ஆண்டவர் தினம். இந்த வாரம் ரெண்டு எவிக்‌ஷன், அதில் ஒன்றை இன்றே செய்வோம்னு சொன்னதுல நேத்து எபிசோடுக்கு எதிர்பார்ப்பு எகிறிபோச்சு. ஆண்டவரும் எந்தக் குறையும் வைக்கல. வாங்க நேத்து என்ன நடந்ததுனு பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

அன்பு குரூப்ல வம்பு வளர்த்துட்டு இருந்தாங்க.

"நல்லா பார்த்துக்கோங்கப்பா, நாங்களும் சண்டை போடறோம், நாங்களும் சண்டை போடறோம், இங்க குரூப்பிசம்லாம் ஒன்னும் இல்ல. பார்க்கறவங்க பார்த்துக்கோங்க."

"நாமினேஷனுக்கு போகும் போது இதெல்லாம் ஞாபகத்துல வச்சுக்குங்க"

இதுதான் அர்ச்சனா & கோ டீமோட மைண்ட் வாய்ஸா இருக்கும்னு நினைக்கிறேன். எல்லாம் கொஞ்ச நேரம் தான். அடுத்த சீன்ல "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" பாட ஆரம்பிச்சுட்டாங்க.

நீதி, நேர்மை, நியாயம் எதுவுமே இல்லாம விளையாடறாங்க, போய் கேள்வி கேப்போம் வாங்க என்று அகத்திற்குள் சென்றார் ஆண்டவர்.

போன வாரம் நடந்த டாஸ்க்ல விட்டுக் கொடுத்து சேஃப் கேம் விளையாடி, நாமினேஷன்ல இருந்து தப்பிச்சவங்க மறுபடியும் எவிக்‌ஷனுக்குள்ள வந்ததை பத்தி கேட்டார். ரமேஷ், சோம், கேப்பி 3 பேரும் அசட்டுச் சிரிப்பு சிரிச்சாங்க.

போரிங் பர்பாமரா ரமேஷ்க்கு ஒரு குட்டு வச்சாரு. 10 வாரம் ஆகப்போகுது, எவிக்‌ஷன்ல கடைசி நிமிஷத்துல தப்பிச்சு, அடுத்த வாரமே கேப்டன்வாய்ப்பு கிடைச்சுது. ஆனா எதையும் கண்டுக்காம எல்லா வாய்ப்பையும் வீணடித்த பெருமை ரமேஷையே சேரும். தூங்கறதை தவிர உருப்படியா எதுவுமே செய்யலை.

அற்புதமான வாய்ப்புனு கமல் சார் சொன்னது எதை பத்தினு கூட ரமேஷ்க்கு தெரியல. கேப்டனா இருந்ததை கூட கமல் சார் ஞாபகபடுத்த வேண்டி இருந்தது. கண்வலி இருந்ததால பொறுப்பை நிஷா கிட்ட கொடுத்துட்டு, இவர் பெட் ரெஸ்ட்ல இருந்தாராம். வைஸ் கேப்டனை மட்டும் வேலை வாங்கினா போதும் இல்ல சார்னு, அவர் செயலை நியாயப்படுத்தராரு. "அப்புறம் எதுக்கு சார் நாம கேப்டனா இருக்கனும்னு" அனிதா டைமிங்ல அடிச்சாங்க.

ரமேஷ் கேப்டன்சி பத்தி மூத்த ஹவுஸ்மேட்ஸ் கிட்ட கருத்து கேட்டாரு. எல்லாருமே நெகட்டிவா தான் சொன்னாங்க. ஆனா அர்ச்சனா மட்டும் ரமேஷுக்கு வக்காலத்து வாங்கினாங்க. இப்ப எல்லாம் வெளிப்படையாவே சப்போர்ட் செய்யறாங்க. போன வாரம் கேப்டனா நிஷா நல்லா பண்ணினாங்கனு சர்காஸ்டிக் கமெண்ட் அடிச்சார் பாலா.

அடுத்ததா அர்ச்சனா-நிஷா பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு நிஷாவை வறுத்தெடுத்துட்டாருனு தான் சொல்லனும். நாம இங்க எழுதிருந்தா மாதிரி பர்சனலா சொன்ன விஷயங்களை டாஸ்க்ல யூஸ் செஞ்சது மன்னிக்க முடியாத குற்றம்.

ரியோவை பிரேக் பண்ண கால்ல விழுந்த அர்ச்சனாவுக்கு ஒரு குட்டு கிடைச்சது. முட்டையை யூஸ் பண்ணி மத்தவங்களை பிரேக் பண்ணிட்டு, ரியோவுக்கு அந்த்ச் கடுமையை காட்டலையேனு சரியா சுட்டிக்காட்டினாரு கமல் சார்.

உங்க டீமுக்கு தான் விளையாடினிங்க்ச்ளானு ரியோவுக்கு ஒரு குத்தூசி போட்டாரு.

அடுத்ததா வொர்ஸ்ட் பர்பாமர் பிரச்சினை. அனிதா இன்னொரு தடவை பொங்கி தீர்த்துட்டாங்க. மீண்டும் ஒருமுறை வொர்ஸ்ட் பர்பாமரை தேர்ந்தெடுக்கச் சொல்லவும், எல்லாரும் நிஷா பேரை சொன்னாங்க. அன்பு டீம் மட்டும் ஆரி பேரை சொன்னாங்க.

பர்பாமன்ஸ் நாமினேஷனை தேர்ந்தெடுக்கறதை பத்தி ஆரி குறை சொன்ன போது, ஆரியும் நிஷாவுக்கு தான் ஓட்டு போட்டதை சுட்டிக் காட்டினாரு.
வொர்ஸ்ட் பர்பாமர் நிஷாவை ஜெயிலுக்கு அனுப்பச் சொல்லவும் தான் இந்த விஷயத்தோட சீரியஸ்னெஸ் எல்லாருக்கும் புரிஞ்சுது.

அடுத்தது எவிக்‌ஷன் தான். ரெண்டு எவிஷன்னு சொன்ன உடனே மொத்த பேரும் அரண்டு போய்ட்டாங்க. ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிட்டு இருந்தாங்க. ரியோ ஒரு படி மேல போய் நாமினேஷன்ல இல்லாதவங்க கூட போக வாய்ப்பிருக்குனு சொன்னாரு. அனிதா தான் சரியான ரீசன் சொல்லிட்டு இருந்தாங்க.

ரமேஷை கன்பெஷன் ரூம் போய் வெயிட் பண்ணச் சொன்னாரு. சோம்சேகரை ஸ்டோர் ரூம் போகச் சொல்லிட்டாரு. ரெண்டு பேர்ல கன்பெஷன் ரூம்ல இருந்து அப்படியே தூக்கிட்டாங்க. ஸ்டோர் ரூம்ல இருந்த சோம் கன்பெஷன் ரூமுக்கு வந்து அங்கிருந்து வெளிய வந்தாரு.

ரமேஷ் வெளிய போனது அன்பு குரூப்புக்கு செம்ம அடி. வெளிய வந்த ரமேஷ் கமல் சார் கிட்ட பேசிட்டு கிளம்பிட்டாரு. இன்னிக்கும் ஒரு அதிரடி இருக்கு. வெயிட் பண்ணி பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>