ஒரு பெண் நோயாளி மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் சுவாச கோளாறு காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . சுவாச கோளாறு முற்றிய நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சேர்க்கப்பட்டார் . பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவ ஊழியர்களால் அவருக்கு மயக்க ஊசி போடப்பட்டது . பின்னர் அவரை மயக்கத்தில் ஆழ்த்தி மருத்துவமையில் பணியாற்றிய அலுவலர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு தள்ளியுள்ளனர் .
இந்த சம்பவம் குறித்து பேசிய வட்டார அதிகாரி ஹரிமோகன் சிங் , இக்கொடூர சம்பவம் நிகழ்ந்த போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சி.சி.டிவி கேமராவின் இணைப்பு ஆப் செய்யப்பட்டிருந்தது . முதலில் கொஞ்சம் சிரமத்துடன் கையாள வேண்டியதாக கருதிய இந்த சம்பவத்தில் நான்கு ஆண் ஊழியர்களும் , ஒரு பெண் ஊழியருக்கும் தொடர்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, என கூறினார். மேலும் இது குறித்து சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார் .
நாடெங்கும் பாலியல் வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில் காப்பாற்ற வேண்டிய அலுவலர்களான மருத்துவர்களே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது, "வேலியே பயிரை மேய்ந்த கதையாக " உள்ளது என பேசப்படுகிறது .