சென்னை துறைமுகத்தில் ரூ.9 கோடி மதிப்பு கடத்தல் சிகரெட் சிக்கியது

by Isaivaani, Feb 3, 2018, 12:08 PM IST

சென்னை: ஈரானில் இருந்து ஜிப்சம் மூட்டைகளில் பதுக்கி கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளை சென்னை துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் புற்றுநோய் எச்சரிக்கை விளம்பரம் பொருந்திய சிகரெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எச்சரிக்கையில்லா சிகரெட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் இருந்து ஜிப்சம் மூட்டைகளில் பதுக்கி அனுப்பி வைக்கப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளை சென்னை துறைமுகத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சிகரெட் பெட்டிகளை மறைத்து இறக்குமதி செய்த தூத்துக்குடி நிறுவனம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

More Crime News


அண்மைய செய்திகள்