முத்தூட் மினி நிறுவன கொள்ளை சம்பவத்தில் பெண் ஊழியருடன் காதலன் கைது

kovai muthoot mini robbery case 2 people arrest

Apr 30, 2019, 16:33 PM IST

கோவை முத்தூட் மின நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், அந்நிறுவனத்தின் பெண் ஊழியர் மற்றும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபலமான முத்தூட் மினி நிறுவனத்தின் கிளை கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்குள் சில தினங்களுக்கு முன் மதியம் 3 மணி அளவில் முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்துக்குள் அடையாளம் தெரியாத மர்மநபர் நுழைந்தார். பின் அலுவலத்தில் இருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கினார். அதில் 2 ஊழியர்களும் மயக்கம் அடைந்து விட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து சாவி மூலம் பெட்டக அறையை திறந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம தப்பி சென்று விட்டார்.

நிதி நிறுவனத்தில் கொள்ளை நடந்த சம்பவத்தை அறிந்த போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 812 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரேணுகா தேவி என்ற பெண் ஊழியர் தன் காதலன் சுரேசுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. சுரேஷ் காதலியை தாக்குவது போல் தாக்கி, நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றார். விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டதால் ரேணுகா தேவி மற்றும் அவரது காதலன் சுரேசும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கத்த போலீசார் கைப்பற்றினர்.

You'r reading முத்தூட் மினி நிறுவன கொள்ளை சம்பவத்தில் பெண் ஊழியருடன் காதலன் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை