வரதட்சணைக்காக கட்டிய மனைவியின் கிட்னியை விற்ற கணவர்: கொல்கத்தாவில் கொடூரம்

Feb 9, 2018, 08:40 AM IST

கொல்கத்தா: வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்று தனது தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்ட கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்த ரிதா சர்கார் (28). இவரது கணவர் திருமணம் ஆனது முதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி பிரச்னை செய்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்குள் எப்போதுமே சண்டை, சச்சரவாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரிதாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், ரிதாவை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ரிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், குடல் இறங்கிவிட்டதால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

இதையடுத்து, ரிதாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிள்ளார். ஆனால், சில நாட்களிலேயே ரிதாவிற்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற ரிதா அங்கு உடல் பரிசோதனை செய்துக் கொண்டார்.

அப்போது தான், அவரது வயிற்றில் ஒரு கிட்னி இல்¬ல் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரிதா சர்கார் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கணவருக்கு எதிராக புகார் அளித்தார்.

புகாரில், “வயிற்று வலி காரணத்தால், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றேன், அங்கு, குடல் இறங்கிவிட்டதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, மருத்துவர்கள் தனது ஒரு கிட்னியை எடுத்து விற்றுவிட்டனர். இதற்கு எனது கணவரும் உடன்தையாக இருந்துள்ளார். வரதட்சணைக்காக கணவர் எனது கிட்னியை விற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், ரிதாவின் கணவரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது, வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

என்னதான் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வந்தாலும், வரதட்சணை கொடுமை உள்பட பெண்களுக்கு எதிரான சம்பவங்களும் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. வரதட்சனைக்காக மனைவியின் கிட்னியை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading வரதட்சணைக்காக கட்டிய மனைவியின் கிட்னியை விற்ற கணவர்: கொல்கத்தாவில் கொடூரம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை