ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி என டெக்னாலஜி மோகத்தில் உலகம் அதிவேகமாக மாறி வருவது பலவிதமான ஆபத்துக்களையும் உடன் அழைத்து வர ஆரம்பித்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் உடை மாற்றும் வீடியோ ஆபாச வலைதளங்களில் வந்து அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதற்கு காரணம் ஒரு ஸ்மார்ட் டிவி என்பது தான் இங்கே மேலும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
வெளிநாட்டில் வேலை செய்யும் அந்த பெண்ணின் கணவர் வாங்கிக் கொடுத்த ஆண்டிராய்டு டிவியில் கணவனுடன் ஸ்கைப்பில் பேசிவிட்டு, அந்த வீடியோ காலை அணைக்காமல், அந்த பெண் உடை மாற்றியுள்ளார்.
அந்த ஸ்மார்ட் டிவியில் உள்ள கேமராவில் அந்த காட்சி பதிவாகி ஆபாச வலை தளங்களில் உலாவி வந்துள்ளது.
அந்த பெண்ணின் கணவர் எதிர்பாராத விதமாக அந்த வீடியோ காண, பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.
அவரது வீட்டில் யாரோ ரகசிய கேமரா பொருத்தி அந்த வீடியோவை படம் பிடித்து உள்ளார்கள் என பயந்து போலீசாருக்கு புகார் அளித்தார்.
போலீசாரும் வீடு முழுவதும் சோதனையிட, அங்கே ரகசிய கேமராக்கள் ஒன்றும் சிக்கவில்லை. அதன் பிறகு, வீடியோ எடுக்கப்பட்ட கோணத்தை ஆய்வு செய்யவே அங்கு ஒரு ஸ்மார்ட் டிவி மாட்டியிருப்பது அனைவரின் கவனத்திற்கும் வர அந்த ஸ்மார்ட் டிவியில் பதிவான அந்த உடை மாற்றும் காட்சியை ஹேக்கர்கள் ஹேக் செய்து ஆபாச வலைதளங்களில் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் மற்றும் இதுபோன்று 200க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த சைபர் கிரைம்களை தடுக்க போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள கேமராக்களை எங்கிருந்தோ யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து உங்கள் அந்தரங்களை திருட முடியும் என்றும், எப்போதும், கேமரா ஆஃப் பண்ணப்பட்டிருக்கிறதா, அதில், தேவையற்ற புதிய சாஃப்ட்வேர்கள் இடம்பெற்றுள்ளனவா என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.